ட்விட்டரில் மாமனார் ரஜினியை மிஞ்சிய தனுஷ் (அஞ்சு வருஷ கேப் இருந்தாலும்)!
ட்விட்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினியை மிஞ்சும் அளவுக்கு தனுஷைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இன்றைக்கு திரையுலகினர் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் ட்விட்டர்தான். சூப்பர் ஸ்டார் முதல் சுள்ளான் ஸ்டார் வரை அனைவருமே இங்கு வந்துவிட்டார்கள்.

ட்விட்டரில் ரஜினி
எத்தனையோ பேர் ட்விட்டரில் இணைந்தாலும், சூப்பர் ஸ்டாரான ரஜினி இணைந்த போதுதான் ட்விட்டரே பரபரப்பானது. ட்விட்டரின் இந்திய நிர்வாகியே ரஜினியை வரவேற்றார்.

பரபரப்பு
ஆனால் அவர் இணைந்த சில தினங்களில் நிலவிய பரபரப்பு, அதற்குப் பின் காணாமல் போனது. காரணம், ரஜினி அதில் தொடர்ந்து கருத்துகள் பதியவில்லை. சில வாழ்த்துகளைப் பதிவு செய்ததோடு சரி. அத்துடன் ரஜினியே நேரடியாக இதனைப் பதிவு செய்வதில்லை, யாரோ ஒரு நிர்வாகிதான் அதைச் செய்கிறார் என்பது தெரிய வந்ததால், மக்களுக்கு சுவாரஸ்யம் குறைந்துவிட்டது.

773000
இதனால் முதலில் அவரைப் பின் தொடரக் குவிந்த அளவுக்கு, இப்போது மக்கள் வருவதில்லை. இப்போது ரஜினியை ட்விட்டரில் தொடர்பவர்கள் எண்ணிக்கு 773000 பேராக உள்ளது.

தனுஷுக்கு அதிகம்
ஆனால் ரஜினியின் மருமகனான தனுஷைப் பின் தொடர்பவர்களோ 883000 பேராக உள்ளனர். அதாவது மாமனார் ரஜினியை விட 1 லட்சம் பேர் அதிகமாக மருமகனைப் பின் தொடர்கிறார்கள்.

தனுஷுக்கு 5 ஆண்டுகள்
ஆனால் நடிகர் தனுஷ் 2010-ல் ட்விட்டருக்கு வந்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாகியிருக்கிறது அவருக்கு இந்த எண்ணிக்கையை எட்ட.

ரஜினிக்கு ஒன்றரை மாதங்கள்
ஆனால் ரஜினி ட்விட்டருக்கு வந்தது இந்த ஆண்டுதான். அதுவும் கோச்சடையான் வெளியான ஜூன் 23-ம் தேதிக்கு சில தினங்கள் முன்புதான் அவர் ட்விட்டரில் இணைந்தார். அதாவது ஒன்றரை மாதத்தில் 773000 பேர்!


Click it and Unblock the Notifications











