ஏமாற்றிய மூன்று பெண்கள்…தனுஷ் உருக்கம்… ஐஸ்வர்யாவை வெறுப்பேத்த இந்த பதிலா ?

சென்னை : நடிகர் தனுஷ் தனது வாழ்க்கையில் 3 பெண்கள் தன்னை ஏமாற்றியதாக உருக்கமாக கூறியது ஐஸ்வர்யாவை வெறுப்பேத்தவா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

தனஷ், ஐஸ்வர்யாக ரஜினிகாந்த் பிரிவதாக மாறிமாறி அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். இது திரைத்துறையினரை மட்டுமின்றி ரசிகர்களையும் மிகவும் அதிர்ச்சி அடையச் செய்தது.

இருவரும் பிரிந்ததற்கான காரணம் தெரியாததால் இணையத்தில் தனுஷ் குறித்தும் ஐஸ்வர்யா குறித்தும் பலவிதமான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

மிகுந்த கோபத்தில் தனுஷ்

மிகுந்த கோபத்தில் தனுஷ்

இருவரையும் சேர்த்து வைக்க பல கட்டபேச்சுவார்த்தை நடந்த போதும் தனுஷ், ஐஸ்வர்யா மீது மிகுந்த கோபத்தில் இருப்பதால் எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் தனுஷ் தயாராகவில்லை. ஆனால், ஐஸ்வர்யாவின் விருப்பம் தனுஷை சமாதானப்படுத்தி எப்படியாவது அவருடன் சேர்ந்துவிட வேண்டும் என எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

வெறுப்பில் ஐஸ்வர்யா

வெறுப்பில் ஐஸ்வர்யா

இதனால் ஐஸ்வர்யா தனுஷ் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்திருந்த தனது பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று மாற்றிவிட்டார். மேலும், உடற்பயிற்சி செய்வது, படப்பிடிப்பில் பிஸியாக இருப்பது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்த பதிவினைப் பார்த்த ரசிகர்கள் பலர் குழந்தைகளை கவனித்துக் கொள்ளுங்கள் எதுக்கு இதுபோன்ற பதிவு என கேட்டுவருகின்றனர்.

ஏமாற்றிய 3 பெண்கள்

ஏமாற்றிய 3 பெண்கள்

இந்த நிலையில், நடிகர் தனுஷ், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது வாழ்க்கையில் முக்கியமானவர்கள் குறித்து பேசினார். அதில், நான் வாழ்க்கையில் மிக மிக நம்பிக்கை வைத்த நான்கு பேரில் ஒருவர் வெற்றிமாறன். மீதி மூன்று பேர் பெண்கள். அவ்வளவு நம்பிக்கையை நான் யார் மீதும் வைத்தது இல்லை. ஆனால் அந்த மூன்று பெண்களும் என்னை கீழே தள்ளிவிட்டார்கள். என் நம்பிக்கையை காப்பாற்றிய ஒரே ஆள் வெற்றிமாறன் தான் என உருக்கத்துடன் தெரிவித்து இருந்தார்.

ஐஸ்வர்யாவை வெறுப்பேத்தவா?

ஐஸ்வர்யாவை வெறுப்பேத்தவா?

தனுஷின் இந்த பதிலைக்கேட்ட ரசிகர்கள், யார் அந்த மூன்று பெண்கள் என்றும், ஒருவர் ஐஸ்வர்யா மற்ற இருவர் யார்? என்று சொல்லி இருக்கலாம் என்றும் கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் ஐஸ்வர்யாவை வெறுப்பேத்த இந்த பதிலா? எல்லாத்தையும் விட்டு தள்ளுங்கள் குழந்தைகளுக்காக மகிழ்ச்சியாக இருங்கள் என்று கமெண்ட்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.

படங்களில்

படங்களில்

தனுஷ் தற்போது, திருச்சிற்றம்பலம், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனுஷ் நடித்த தி கிரே மேன் திரைப்படம் ஜூன் 3ந் தேதி வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X