D55: மிருணாள் தாகூர் உடனான கிசுகிசுவை ஓரம் வைங்க.. தனுஷ் கொடுத்த வெயிட்டான அப்டேட்டை பாருங்க!

சென்னை: நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் இருந்து தனது கெரியரை தொடங்கி இருந்தாலும் தற்போது பான் இந்தியா ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என அவருக்கு அங்கு ரசிகர்கள் இருப்பது மட்டும் இல்லாமல் மார்க்கெட்டும் உருவாகிவிட்டது. இப்படி இருக்கையில் தனுஷ் தனது அடுத்த படத்தில் கமிட் ஆகி உள்ளது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கி இருந்தார். அதன் பின்னர் இந்தியில் வெளியான படம் தேரே இஷ்க் மே. இந்த படத்திற்கு தமிழில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், இந்தியில் படம் சுமார் 100 கோடிகளை வசூலித்தது. கடந்த ஆண்டில் மட்டும் தனுஷ் நடிப்பில் குபேரா, இட்லி கடை மற்றும் தேரே இஷ்க் மே என மூன்று படங்கள் வெளியாகி இருந்தது.

கடந்த வாரத்தில் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படமான கர படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானது. இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கி உள்ளார். ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Dhanush Rajkumar Periasamy joins Their Next Movie Called D55 Official Announcement

தனுஷ் 55: இப்படி இருக்கையில் தனுஷின் 55வது படத்தின் அறிவிப்பை படக்குழு சிறப்பாக அறிவித்துள்ளது. அதாவது இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு தற்சமயம் D55 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் ஆர்டேக் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ரசிகர்கள் ரியாக்‌ஷன்: இந்த அறிவிப்பைப் பார்த்த பலரும், தனுஷும் நடிகை மிருணாள் தாகூரும் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் உலா வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அவர், இது குறித்து எல்லாம் கவனம் கொள்ளாமல், தனது அடுத்த படத்தின் வேலையில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார் என்று பேசி வருகிறார்கள். மேலும், தனுஷ் குறித்து எப்போதும் ஏதாவது கிசுகிசுக்கள் பரப்பப்பட்டே வருகிறது. ஆனால் தனுஷ் அதற்கெல்லாம் எப்போதும் கவலைப்பட்டதில்லை என்று தனுஷ் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X