போயஸ் கார்டனில் வீடு வாங்கக்கூடாதா?.. நான் அப்படி பேசியது ஒருவருக்கு இன்ஸ்பிரேஷன்.. தனுஷ் ஓபன் டாக்
சென்னை: தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் கர திரைப்படம் ஏப்ரல் 30ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையையும் விதைத்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க நேற்று படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டும் நடந்தது. அப்போது, போய்ஸ் கார்டனில் நானெல்லாம் வீடு வாங்கக்கூடாதா என்று ஏற்கனவே சொன்னது மீமாக மாறியது குறித்து ஒபனாக பேசியிருக்கிறார்.
தனுஷ் கடைசியாக நடித்த மூன்று படங்களும் சரியாக போகவில்லை. இட்லி கடை மட்டும் ஓரளவுக்கு தேறியது. எனவே தரமான ஒரு ஹிட்டை கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் மமிதா பைஜு, சுராஜ் வெஞ்சரமுடு, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் என பலர் நடித்திருக்கிறார்கள். வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

வெளியான ட்ரெய்லர்: படமானது ஏப்ரல் 30ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. சூழல் இப்படி இருக்க நேற்று படத்தின் ட்ரெய்லரும் வெளியானது. படத்தில் திருடனாக தனுஷ் நடித்திருக்கிறார். ட்ரெய்லரை பொறுத்தவரை பக்காவாக இருக்கிறது. முக்கியமாக, தனுஷின் நடிப்பு, விக்னேஷின் மேக்கிங், ஜிவியின் இசை எல்லாம் சேர்ந்து சூப்பர் உணர்வை கொடுக்கிறார்கள். இந்நிலையில் நேற்று படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டும் நடந்தது. அப்போது தனுஷ் பேசிய விஷயம் சோஷியல் மீடியாவில் பயங்கரமாக ட்ரெண்டாகியுள்ளது.
தனுஷ் பேச்சு: நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஆர்.ஜே.விஜய் தனுஷிடம், 'போயஸ் கார்டனில் நான் எல்லாம் வீடு வாங்கக்கூடாதா?' என பேசியது மீமாக மாறியது பற்றி கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், "அதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நமது கைகளில்தான் இருக்கிறது. சமீபத்தில் நடந்த சம்பவத்தை சொல்கிறேன். விமான நிலையத்திலிருந்து விமானத்துக்கு ஒரு பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். அந்தப் பேருந்தை ஓட்டிய அண்ணன், தம்பி உங்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டு செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
இன்ஸ்பிரேஷன்: அப்போது அவர் என்னிடம், 'தம்பி இதுவரை நான் யாரிடமும் செல்ஃபி எடுத்ததுமில்லை; எடுக்கலாமா என்று கேட்டதும் இல்லை. ஆனால் நீங்கள் ஒரு படத்தின் விழாவில் பேசியபோது, 'ஏன் நான் எல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்கக்கூடாதா?' என்று பேசினீர்கள். அதை பார்த்து எனது மகன் ரொம்பவே இன்ஸ்பிரேஷன் ஆகிவிட்டார். கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார் என கூறினார். இப்படியும் இதை எடுத்துக்கொள்ளலாம். மீமாக போட்டால் பரவாயில்லை. அவர்களை என்ட்டெர்டெயின் செய்யத்தானே நாம் வந்திருக்கிறோம். இதோ இதையும் சொல்கிறேன், 'ஏன் நான் எல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்கக்கூடாது என சொல்லக்கூடாதா?' என கேள்வி எழுப்பினார்.
தனுஷின் விவாகரத்து: முன்னதாக, தனுஷும், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் திடீரென விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். இதற்கிடையே ரஜினி குடியிருக்கும் போயஸ் கார்டன் ஏரியாவில் தனுஷும் பிரமாண்டமாக பங்களா வாங்கினார். அப்போது எங்களாலும் போயஸ் கார்டனில் குடியேற முடியும் என்பதை காண்பிப்பதற்கே தனுஷ் அங்கு பங்களா கட்டியிருக்கிறார் என்று ஒரு தகவல் ஓடியது நினைவ்கூரத்தக்கது.


Click it and Unblock the Notifications
