ஹாலிவுட் வாய்ப்பை வேணாம்னு சொல்லிட்டாராமே தனுஷ்!
சென்னை: ஹாலிவுட்டில் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம் நடிகர் தனுஷ்.
நடிகராக அறிமுகமான தனுஷ், இந்த பதின்மூன்று ஆண்டுகளில் பல அவதாரங்கள் எடுத்துவிட்டார்.
நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், வெளியில் தெரியாத கதை வசனகர்த்தா, அடுத்து இயக்குநராகப் போகிறவர்... இப்படி ஏகப்பட்ட விஷயங்களை உள்ளே வைத்திருக்கிறார்.

ஒரே ஹிட்
ஆனால் தமிழில் மட்டும் கடைசியாக ஹிட் கொடுத்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. ஒரே ஆறுதல் இந்தியில் கிடைத்த ராஞ்சனா வெற்றிதான்.

தமிழில் 3 படங்கள்
தமிழில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கும் ‘வேலையில்லா பட்டதாரி', கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘அனேகன்', வெற்றிமாறன் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் என மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தியிலும் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

பிரிட்டிஷ், ஸ்பானிஷ்
இந்த நிலையில்தான் இவரை பிரிட்டிஷ், ஸ்பானிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடிக்க அழைத்தார்களாம்.
இதுகுறித்து தனுஷே கூறியிருப்பதைப் படியுங்கள்..
"பல ஹாலிவுட் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்திருப்பது உண்மைதான். பிரிட்டிஷ், ஸ்பானிஷ் படங்களில் நடிக்கவும் அழைப்பு வந்தது. ஆனால், இங்கு பல படங்களில் பிசியாக இருப்பதால் அந்த படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

முடியாதது எதுவும் இல்லை
பாலிவுட்டில் அறிமுகமாகிய நேரத்தில் என்னைப் பார்த்து எல்லோரும் சிரித்தார்கள். இந்நிலையில் ஹாலிவுட்டில் நடிக்கப் போகிறேன் என்றால் இன்னும் சிரிப்பார்கள் என்பது தெரியும். நினைச்சா எனக்கே சிரிப்புதான் வருகிறது. ஆனால், எதுவுமே சாத்தியம்தான். முடியாதது என்று எதுவும் இல்லையே," என்றார்.


Click it and Unblock the Notifications











