குழந்தைகளுக்காக தனுஷ் இப்படியா?.. இவ்வளவு நல்ல மனசுக்காரரா இருக்காரே ப்பா.. சூப்பர் பாஸ்
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் கர திரைப்படம் ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மமிதா பைஜு, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். பெரிய எதிர்பார்ப்பை படம் சம்பாதித்திருக்கிறது. இந்நிலையில் தனுஷ் குறித்து இயக்குநர் விக்னேஷ் ராஜா சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்து பாராட்டை பெற்றிருக்கிறது.
தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கர. இதில் அவருடன் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். மமிதா பைஜூ ஹீரோயினாக நடித்திருக்கிறார். கடந்த வருடத்தில் தனுஷ் மூன்று திரைப்படங்களில் நடித்திருந்தார். அவற்றில் அவர் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் மட்டும்தான் ஓரளவுக்கு ஹிட்டானது. மற்ற இரண்டு படங்களான குபேரா, தேரே இஷ்க் மெய்ன் உள்ளிட்ட படங்கள் எல்லம் முரட்டுத்தனமான் அடியை வாங்கின.

நீண்ட நாட்கள் ஆகிவிட்டன: தனுஷிடமிருந்து ஒரு தரமான தியேட்டரிக்கல் ஹிட் கொடுத்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டன. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம்தான் அப்படி ஹிட்டானது. எனவே ஒரு சூப்பர் ஹிட்டை கொடுத்துவிட வேண்டுமென்பதில் முழு ஆர்வத்தோடு பணியாற்றிவருகிறார் அவர். போர்த்தொழில் படத்தை இயக்கி பெரிதும் கவனம் ஈர்த்த விக்னேஷ் ராஜா இயக்கம் என்பதால் இதன் மீது அதீத நம்பிக்கை பலருக்கும் பிறந்திருக்கிறது.
திருடனாக தனுஷ்: இப்படத்தில் தனுஷ் திருடனாக நடித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்புதான் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. முதன்முறையாக D திருடனாக நடித்திருப்பதால்; அதை அவர் எவ்வாறு ப்ரெசண்ட் செய்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் உச்சக்கட்ட ஆவலில் இருக்கிறார்கள். இப்படத்திலும் அவர் விருது வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இது ஒருபக்கம் இருக்க நிச்சயம் இப்படம் தரமான ஹிட்டடிக்கும் என படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரத்தினரும் நம்பிக்கை கொடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் ராஜா பேட்டி: இந்நிலையில் படமானது ஏப்ரல் 30ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதன் காரணமாக படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. இயக்குநர் விக்னேஷ் ராஜா தொடர்ந்து பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்துவருகிறார். அந்தவகையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் கொடுத்த பேட்டியில் தனுஷ் குறித்து பேசிய விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அந்தப் பேட்டியில் அவர், "கர படத்தின் ஷூட்டிங்கின்போது தனுஷிடம் நான், 'சார் நீங்கள் எவ்வளவோ கேரக்டர்கள் செய்திருக்கிறீர்கள். அதில் உங்களுக்கு சவால் கொடுத்த கேரக்டர் என்றால் எது?' என கேட்டேன்.
தனுஷ் சொன்ன பதில்: அதற்கு அவரோ, மாரி என்று கூறினார். அந்தப் படத்தில் குழந்தைகள் பலூன்களை வைத்து விளையாடிக்கொண்டிருக்கும்போது சிகரெட்டால் அதை உடைப்பது போன்ற காட்சியில் நடிப்பதற்கு ரொம்பவே சிரமமாக இருந்தது என கூறியதாக" தெரிவித்தார். எத்தனையோ கஷ்டமான ரோல்களை தனுஷ் செய்திருக்கிறார். ஆனாலும் குழந்தைகளை கஷ்டப்படுத்தும் ரோலில் நடிப்பதுதான் உண்மையில் கஷ்டம் என தனுஷ் சொல்லியதற்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகிறார்கள். முன்னதாக, மாரி திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது. பாலாஜி மோகன் படத்தை இயக்கியிருந்தார். தனுஷின் கெட்டப், அனிருத்தின் பாடல்கள் என படத்துக்கு ஓவர் ஹைப் ஏற்றப்பட்டன. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது.


Click it and Unblock the Notifications