நடிகையை அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு கூப்பிட்ட தனுஷ்?..மேனேஜர் பேருதான் ரொம்ப அடிபடுது.. அடிக்கடி வருதே.. கவனிங்க பாஸ்

சென்னை: தனுஷ் நடிப்பில் இன்னும் சில நாட்களில் தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் இயக்குநர் ஆனந்த் எல். ராயும், தனுஷும் இணைந்த ராஞ்சனா படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருப்பதால் இக்கூட்டணி மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் இந்த சமயத்தில் தனுஷை சுற்றி சர்ச்சையும் எழ ஆரம்பித்திருக்கிறது. நடிகை மான்யா ஆனந்த் கொடுத்த பேட்டிதான் அதற்கு விதையாகவும் அமைந்திருக்கிறது.

இந்திய அளவில் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்ற தனுஷ் தமிழில் இட்லி கடை கொடுத்த பாசிட்ட்வி ரெஸ்பான்ஸோடு ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தேரே இஷ்க் மெய்ன் படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்க கீர்த்தி சனோன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படமானது வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

தனுஷை சுற்றி சர்ச்சை: தமிழ், ஹிந்தி என படுபிஸியாக இருக்கும் தனுஷை சுற்றி சர்ச்சைகள் எழுவதும் வழக்கமாகியிருக்கிறது. முதலில் அவருக்கும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கும் நடந்த விவாகரத்து விஷயம், அடுத்து திரைத்துறையில் யாருக்கு விவாகரத்து நடந்தாலும் அதில் தனுஷின் பெயரை இழுப்பது என தொடர்ந்து அவரை டார்கெட் செய்துவந்தார்கள். இதற்கு தனுஷும் குறிப்பிட்ட காலம் அமைதியாக இருந்து குபேரா, இட்லி கடை உள்ளிட்ட ஆடியோ வெளியீட்டு விழாவில் தரமான பதிலடி கொடுத்தார்.

Dhanush Row Actress Manya Anand Allegation Sparks Controversy Manager Shreyas Name also involved
Photo Credit:

ஸ்ரேயாஸும் பேச்சு: தனுஷின் அந்த மேடை பேச்சு அவரது ரசிகர்களுக்கு பெரிய தெம்பை கொடுத்தது. அதேபோல் அவரது மேனேஜர் ஸ்ரேயாஸ் என்பவரும் அவ்விழாவில் பேசுகையில், "பிரபலமாவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ரத்தம், வியர்வை சிந்தி உச்சத்துக்கு போவது. இன்னொன்று உச்சத்தில் இருப்பவரை அடித்து முன்னேறுவது என பேசினார்.மேலும் தனுஷால் வள்ர்ந்தவர்கள் அவர் வளர்த்துவிட்டவர்களே துரோகிகளாகி இருப்பதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி ரொம்ப நல்லவனாக இருக்காதீர்கள் என்று அட்வைஸும் செய்திருந்தார்.

நடிகை கிளப்பிய பரபரப்பு: அன்றுதான் தனுஷுக்கு இவ்வளவு விஸ்வாசமாக ஒரு மேனேஜர் இருக்கிறார் என்று பலருக்கும் தெரியவந்தது. சூழல் இப்படி இருக்க சின்னத்திரை நடிகை மான்யா ஆனந்த் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஸ்ரேயாஸ் என்ற பையன் எனக்கு மெசேஜ் செய்து, ஒரு ஸ்டோரி இருக்கு பண்றீங்களா என கேட்டுவிட்டு நீங்கள் ஹீரோவுடன் கமிட்மென்ட் செய்யும்படி இருக்கும் என்று சொன்னார். நான் அதெல்லாம் முடியாவது என்று சொன்னேன். உடனே அவர் அந்த ஹீரோ தனுஷாக இருந்தாலும் கமிட்மென்ட் செய்யமாட்டீர்களா என கேட்டார். யாராக இருந்தாலும் முடியாது என சொல்லிவிட்டேன்" என்றார்.

Dhanush Row Actress Manya Anand Allegation Sparks Controversy Manager Shreyas Name also involved
Photo Credit:

தொடர் சர்ச்சை: மான்யா ஆனந்த்தின் இந்தப் பேட்டி புதிய புயலை கோடம்பாக்கத்தில் கிளப்பியிருக்கிறது. அதுமட்டுமின்றி ஏற்கனவே தனுஷ் கம்பெனியான வுண்டர் பார் பிலிம்ஸ் பெயரில் காஸ்ட்டிங் கால் நடத்துகிறார்கள் என்று போலியாக ஒரு அறிவிப்பு வெளியானது. அதற்கு ஸ்ரேயாஸ் உடனடியாக பதறியடித்து மறுப்பு தெரிவித்தார். ஆனால் இதற்கு அவர் ஏன் இன்னமும் அமைதியாக இருக்கிறார் என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். வுண்டர் பார் விவகாரத்திலும் ஸ்ரேயாஸின் பெயர்தான் பலமாக அடிபட்டது. இப்படி தனது மேனேஜர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவது தனுஷ் கவனத்துக்கு செல்கிறதா இல்லையா என்றும், இப்படியே இருந்தால் அவரது பெயருக்கும் டேமேஜ் ஆகுமே என்பதை உணர்ந்திருக்கிறாரா என்று அவரது ரசிகர்கள் வேதனையடைந்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Read more about: dhanush தனுஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X