தனுஷின் 54ஆவது படம்.. சத்தமே இல்லாமல் ஷூட்டிங் ஓவர்.. மனுஷனா மெஷினா?.. இவ்வளவு ஸ்பீடா?
சென்னை: தனுஷ் நடிப்பில் இந்த வருடம் தேரே இஷ்க் மெய்ன், இட்லி கடை ஆகிய படங்கள் வந்தன. இவற்றில் இட்லி கடை தமிழில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. ஆனால் ஹிந்தியில் வெளியான தேரே இஷ்க் மெய்ன் தோல்வியை சந்தித்தது. இப்படத்தை அவர் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே போர்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட்டானார். அது அவரது 54ஆவது படம் ஆகும்.
இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் தனுஷ். அவர் சினிமாவுக்குள் வந்தபோது பலர் அவரை கிண்டல் செய்தார்கள். இப்போது அவருடைய வளர்ச்சியை பார்த்து அவர்கள் வாயடைத்து போயிருக்கிறார்கள். நடிப்பு மட்டுமின்றி பாடல்கள் பாடுவது, எழுதுவது என இருந்த அவர்; பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். இப்படி படு பிஸியாக இருக்கும் அவரை பார்த்து பலரும் ஆச்சரியம்தான் படுகிறார்கள்.
இந்த வருடத்தில் இரண்டு படங்கள்: தனுஷுக்கு கடந்த சில வருடங்களாகவே பெரிய ஹிட் எதுவும் இல்லை. ரொம்பே எதிர்பார்த்த 50ஆவது படமான ராயன் சொதப்பிவிட்டது. அந்தப் படத்தை அவரே இயக்கியிருந்தார். கதை, திரைக்கதையில் எந்த புதுமையும் இல்லாததால் படத்தை இழுத்து மூடிவிட்டார்கள் ரசிகர்கள். அந்தப் படத்துக்கு பிறகு இட்லி கடை படத்தை இயக்கி நடித்தார். இட்லி கடை அவருக்கு நல்ல வியாபாரத்தை கொடுத்தது. அதற்கு பிறகு ஹிந்தியில் தேரே இஷ்க் மெய்ன் ரிலீஸானது.

பாலிவுட்டில் தோல்வி: இட்லி கடை கொடுத்த வெற்றி தேரே இஷ்க் மெய்ன் படத்திலும் வரும் என்றுதான் எதிர்பார்த்திருந்தார்கள் அவரும் அவரது ரசிகர்களும். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. பழைய கால கதையை எடுத்ததுகூட பரவாயில்லை; அதை கொஞ்சமாவது பட்டி டிங்கரிங் பார்க்காமல் பழையபடியே எடுத்த ஆனந்த் எல்.ராய் ரொம்பவே ஏமாற்றிவிட்டார் என்று படம் பார்த்த ரசிகர்கள் விமர்சனத்தை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
போர்த்தொழில் இயக்குநருடன்: இதற்கிடையே தமிழில் அவர் கைவசம் ஏராளமான படங்கள் இருக்கின்றன. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதுமட்டுமின்றி போர்த்தொழில் படத்தை இயக்கி பெரிய கவனத்தை ஈர்த்த விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் நடிக்க கமிட்டானார். போர்த்தொழில் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதால் இந்தக் கூட்டணி பற்றிய அறிவிப்பு வந்ததுமே ஓவர் ஹைப் ஏறியது.
சத்தமே இல்லாமல் முடிந்த ஷூட்டிங்: படத்தின் அறிவிப்பு வந்தது மட்டும்தான் தெரியும். அடுத்தடுத்து என்ன வேலைகள் படத்தில் நடந்தன என்பது பற்றியெல்லம் சத்தமே இல்லை. ஆனால் இப்போது அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்திருக்கிறது. ஷூட்டிங் முடிந்ததை கொண்டாடும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இப்படி வேகமாக ஓடும் தனுஷ் மனிதரா இல்லை மெஷினா என்ற சந்தேகம் எழுவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











