அதான் நாங்க ஆளாகிட்டோமே... நீங்க வெளிநாட்டுக்கு போங்க!- கஸ்தூரிராஜாவுக்கு தனுஷ் அட்வைஸ்!!

By Shankar

சென்னை: சினிமாவில் நாங்கள் தலையெடுத்துவிட்டோம். இனி அம்மாவுடன் வெளிநாட்டுக்கு டூர் போங்க, என்று தந்தை கஸ்தூரி ராஜாவுக்கு அட்வைஸ் செய்தார் நடிகர் தனுஷ்.

விஜய்க்கு எப்படி எஸ் ஏ சந்திரசேகரோ, அப்படித்தான் தனுஷுக்கு கஸ்தூரி ராஜா!

மகன்கள் டாப் நடிகர்களாகிவிட்ட நிலையில், புதுமுகங்கள் அல்லது வளரும் நடிகர்களை வைத்து மகா சொதப்பலாக படங்கள் தருவது இவர்கள் வழக்கம். எஸ்ஏ சந்திரசேகரனாவது பரவாயில்லை, எடுத்த படத்தை வெளியிடுவார். ஆனால் கஸ்தூரிராஜாவின் படங்கள் அறிவிப்போடு நின்றுவிடும். ஏற்கெனவே அப்படி இரு படங்கள் உள்ளன.

காசு பணம் துட்டு

காசு பணம் துட்டு

இப்போது புதிதாக காசு பணம் துட்டு என்ற பெயரில் ஒரு படம் எடுத்துள்ளார். தயாரிப்பாளரும் கஸ்தூரிராஜாதான்.

முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. பாடல்களை நடிகர் தனுஷ் வெளியிட, ஒளிப்பதிவாளர் மது அம்பாட் பெற்றுக்கொண்டார்.

மகன்கள்

மகன்கள்

விழாவில், இயக்குநர் கஸ்தூரிராஜா பேசுகையில், "என் மகன்கள் இப்போது சினிமாவில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் என்னை, 'நீ ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாய்... அம்மாவுடன் லண்டன், சுவிட்சர்லாந்து என்று ஜாலியாக சுற்றுலா போக வேண்டியதுதானே,' என்கிறார்கள்.

ஓடிக்கிட்டே இருக்கணும்

ஓடிக்கிட்டே இருக்கணும்

ஆனால், நான் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை நான் ஒரு புதுமுக இயக்குனராக நினைக்கிறேன். இன்று உள்ள புதுமுக இயக்குனர்களைப் பார்த்துப் பிரமிக்கிறேன். அவர்கள் அமைத்த பாதையில் பயணம் செய்ய விரும்புகிறேன்.

புனித நூலைத் தொலைச்சிட்டேன்

புனித நூலைத் தொலைச்சிட்டேன்

நான் சினிமாவுக்கு வந்தபோது என் கையில் ஒரு புனித நூலும், முதுகில் என் குடும்ப சுமையும் இருந்தது. குடும்பத்தை நல்ல இடத்தில் சேர்க்கும்போது, புனித நூலை தொலைத்து விட்டேன். அதைத்தேடும் முயற்சியில் இப்போது இருக்கிறேன்.

கடந்த 2 வருடங்களாக இந்த படத்துக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன். கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து இருக்கிறேன். இந்த படத்தில், என்னைத் தவிர அனைவரும் புதுமுகங்கள்,'' என்றார்.

பாட மறுப்பு

பாட மறுப்பு

விழாவில், நடிகர் தனுஷ் பேசுகையில், "இதுவரை அப்பா இயக்கிய படங்களில் நான் கலந்து கொள்ளும் முதல் இசை வெளியீட்டு விழா இதுதான். இந்த படத்தில், என்னை ஒரு பாடல் பாடும்படி அப்பா கேட்டார். ஆனால், எனக்கு நேரம் இல்லாத காரணத்தால் பாட முடியவில்லை.

நாங்க ஆளாகிட்டோம்.. நீங்க போங்க!

நாங்க ஆளாகிட்டோம்.. நீங்க போங்க!

அப்பா தொலைத்த புனித நூலை நானும், அண்ணனும் எடுத்துக்கொண்டு ஆளாகி விட்டோம். இனி அப்பா, அம்மாவுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா போகும்படி கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

விழாவில் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X