நவம்பரில் தனுஷ் நடித்த அனேகன்
வேலையில்லா பட்டதாரி பெரும் வெற்றி பெற்ற சந்தோஷம்... இன்னொரு பக்கம் அமிதாப்புடன் நடிக்கும் ஷமிதாப் படத்துக்கு எழுந்துள்ள பெரும் எதிர்ப்பார்ப்பு.. இவற்றை ஒரு சேர அனுபவித்துக் கொண்டிருக்கும் தனுஷுக்கு, அடுத்த மாதம் இன்னும் ஒரு சந்தோஷம் காத்திருக்கிறது.
அது கே வி ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்துள்ள அனேகன் பட வெளியீடு. வரும் நவம்பர் 21-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்துக்கான இசையமைப்பை முடித்துவிட்டாராம் ஹாரிஸ் ஜெயராஜ். தீபாவளிக்கு பாடல்களை வெளியிட்டுவிடலாம் என தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பாலிவுட்டிலிருந்து அமிரா தஸ்தூர் நாயகியாக அறிமுகமாகிறார். ரொம்ப நாளைக்குப் பிறகு கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தை தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் படமாக்கியுள்ளனர். கம்போடியாவில் சில காட்சிகளை எடுத்துள்ளனர். தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திராத பல புதிய லொகேஷன்கள் இந்தப் படத்தில் உண்டாம்.
மாற்றானில் கேவி ஆனந்த் சறுக்கினாலும், மிகுந்த நம்பிக்கையுடன் மீண்டும் ஒரு மெகா வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளது ஏஜிஎஸ் நிறுவனம்.


Click it and Unblock the Notifications











