தனுஷுக்கு இதயத்தையும், பூவையும் கொடுத்த மிருணாள் தாகூர்.. இருவருக்கும் காதலா?.. மீண்டும் சூடுபிடிக்குதே
சென்னை: தனுஷ் நடிப்பில் தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் நாளை மறுதினம் வெளியாகவிருக்கிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கும் நிலையில்; அவருக்கும், மிருணாள் தாகூருக்கும் இடையே காதல் என்று மீண்டும் பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன. அந்தப் பேச்சுக்கள் கிளம்பியிருப்பதற்கு தனுஷே வழி வகுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான இட்லி கடை சொல்லிக்கொள்ளும்படியான ரெஸ்பான்ஸை பெற்றது. அப்படத்தை அவரே இயக்கவும் செய்திருந்தார். இயக்கம், நடிப்பு என இரண்டிலும் முத்திரை பதித்த தனுஷ் மீண்டும் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ராஞ்சனா இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தற்போது தேரே இஷ்க் மெய்ன் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார்.
நாளை மறுதினம் ரிலீஸ்: ராஞ்சனாவில் பெற்ற வெற்றியை போன்றே இந்தப் படத்திலும் தனுஷ் - ஆனந்த் கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருவரின் ரசிகர்களிடமும் இருக்கிறது. படமானது நாளை மறுதினம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதன் காரணமாக தீவிரமடைந்திருக்கும் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஒட்டுமொத்த படக்குழுவும் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றது.

தனுஷின் பெர்சனல் வாழ்க்கை: இதற்கிடையே தனுஷ் நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு இரண்டு மகன்களுக்கு தந்தையும் ஆனார். பத்து வருடங்களுக்கும் மேலாக நல்லபடியாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்பு விரிசலை சந்தித்தது. அவர்களை சேர்த்து வைத்துவிடலாம் என்று குடும்பத்தினர் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைய கடந்த வருடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றார்கள்.
மிருணாள் தாகூருடன் காதல்?: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை பிரிந்த தனுஷ் இப்போதுவரை சிங்கிளாகவே இருக்கிறார். அதேசமயம் அவரும் நடிகை மிருணாள் தாகூரு காதலிக்கிறார்கள் என்று பேச்சுக்கள் கிளம்பின. சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு பார்ட்டியில் இரண்டு பேரும் கலந்துகொண்டார்கள். அதேபோல் தனுஷின் சகோதரிகள் இரண்டு பேரையும் மிருணாள் இன்ஸ்டாகிராமில் ஃபாலோவும் செய்கிறார். எனவே கண்டிப்பாக அவர்களுக்குள் காதல் மலர்ந்துவிட்டது என்று அடித்து கூறினார்கள்.
மீண்டும் பரவும் பேச்சு: ஆனால் அதனை மிருணாள் மறுத்திருந்தார். இந்நிலையில் அவர் தோ திவானே ஷாஹர் மெய்ன் என்ற பட்டத்தில் நடித்திருக்கிறார். அதன் அனிமேஷன் டீசரை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட, தனுஷோ, 'சத்தமும் ஒலியும் நன்றாக இருக்கின்றன' என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு ரிப்ளை செய்திருந்த மிருணாள், இதயம் மற்றும் பூ எமோஜியை கொண்டு பதிலளித்திருந்தார். இதனைப் பார்த்த பிறகு, தனுஷும், மிருணாளும் காதலிப்பது உண்மைதான் என்று திட்டவட்டமாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











