தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. D55 படத்திலிருந்து வந்திருக்கும் அப்டேட்.. என்ன தெரியுமா?
சென்னை: தனுஷ் நடிப்பில் கடந்த வருடத்தில் வெளியான மூன்று படங்களில் இட்லி கடை மட்டும்தான் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இரண்டு படங்கள் சொதப்பியதால் அவரும் அவரது ரசிகர்களும் அப்செட்டானார்கள். இருந்தாலும் அடுத்தடுத்து வரும் படங்கள் எல்லாம் தரமாக இருக்கும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தனுஷ் ஒரு தரமான ஹிட்டை கொடுத்து நீண்ட காலமாகிவிட்டது. அவர் இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த வருடம் வெளியான இட்லி கடை படம் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றாலும்; பலரிடம் விமர்சனத்தையும் சந்தித்தது. அவர் எடுத்திருக்கும் கதையை பார்த்தால் குலத்தொழிலை ஆதரிக்கும்படி இருக்கிறதே என்று பலரும் பேசினார்கள். விமர்சனங்கள் அப்படி இப்படி வந்தாலும் பாக்ஸ் ஆஃபிஸில் டீசன்ட்டான நம்பர்களை பெற்றதாக தெரிகிறது. ஆனாலும் இதைவிட பெரிய வெற்றியைத்தான் அவர் எதிர்பார்த்தார். அது கிடைக்காததில் அவருக்கு கொஞ்சம் வருத்தம்தான்.
குபேரா, தேரே இஷ்க் மெய்ன்: இட்லி கடை தவிர்த்து கடந்த வருடத்தில் அவர் நடிப்பில் குபேரா, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்களும் வந்தன. அவ்விரண்டு படங்களுமே தமிழ்நாட்டில் சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை. அதுவும் தேரே இஷ்க் மெய்ன் படமெல்லாம் ஹைதர் அலி காலத்து கதை என ப்ளூ சட்டை மாறன் தொடங்கி சராசரி ரசிகர்வரை கடுமையாக விமர்சித்தார்கள். இப்படியாக இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன், குபேரா ஆகிய மூன்று படங்களும் 100 சதவீதம் ஒர்க் அவுட் ஆகாமலேயே போய்விட்டன.

தனுஷின் கர: இந்தப் படங்களுக்கு பிறகு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கடந்த மாதத்தில்தான் அந்தப் படத்தின் டீசர் வெளியானது. டீசரை பார்க்கையில் கண்டிப்பாக தனுஷுக்கு தரமான கம்பேக் கொடுக்கக்கூடிய படமாக இது இருக்கும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த வருடத்தில் அந்தப் படம் ரிலீஸாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மம்மூட்டியுடன் தனுஷ்: இதற்கிடையே அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் அவர். படத்துக்கு D55 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதில் அவருடன் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். அமரன் படத்தின் மெகா வெற்றி ராஜ்குமார் பெரியசாமி மீது பெரிய எதிர்பார்ப்பை உண்டு செய்திருக்கிறது. அந்த வெற்றி கொடுத்த வைபை கண்டிப்பாக தனுஷ் படத்திலும் தக்க வைப்பார் என்று நம்பலாம். ஏற்கனவே மம்மூட்டி படத்தில் தனுஷ் ஒரு கேமியோ ரோல் செய்திருந்தார். இப்போது கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகு அவர்கள் இணைந்து நடிப்பதும் படத்தின் ஹைப்புக்கு காரணமாக இருக்கிறது.
நாளை ஷூட்டிங்: படத்தின் பூஜை சமீபத்தில்தான் சென்னையில் நடந்தது. அதில் மம்மூட்டியை தவிர்த்து படத்தில் பணியாற்றுபவர்கள் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் D55 படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி நாளை முதல் படத்துடைய ஷூட்டிங் சென்னையில் தொடங்கவிருப்பதாகவும்; முதலில் தனுஷ் தொடர்பான காட்சிகளை படமாக்க இயக்குநர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. சீக்கிரமாகவே ஷூட்டிங்கை முடித்து இந்த வருடத்திலேயே படத்தை ரிலீஸ் செய்யும் திட்டமும் இயக்குநருக்கு இருப்பதாக சொல்கிறார்கள் திரைத்துறையினர்.


Click it and Unblock the Notifications











