எப்பவோ ட்ராப் ஆன படம்.. தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி.. இப்போ வெறித்தனமா வைரலாகும் போஸ்டர்.. ஆனால்?
சென்னை: வெற்றிக் கூட்டணியான தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் அறிவிக்கப்பட்டு, பின்னர் ட்ராப் செய்யப்பட்ட படம் ஒன்றின் போஸ்டர் இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகிறது.
அது ஒரு கனா காலம் படத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு, பொல்லாதவன் படத்தின் மூலம் தொடர்ந்த காம்போ அசுரன் வரை அசராமல் நின்று ஆடி பல சாதனைகளை படைத்து வருகிறது.
இந்நிலையில், தற்போது 'தேசிய நெடுஞ்சாலை' என்ற டைட்டிலில் ட்ராப் ஆன படத்தின் போஸ்டர் வைரலாகி வருகிறது.

அது ஒரு கனா காலம்
இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் தனுஷ், பிரியாமணி நடிப்பில் வெளியான ‘அது ஒரு கனா காலம்' படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்தவர் வெற்றிமாறன். அப்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக, 2007ம் ஆண்டு பொல்லாதவன் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றினார் நடிகர் தனுஷ்.

ஹிட் மேல ஹிட்
பொல்லாதவன் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அனைத்து படங்களுமே ஹிட் மேல ஹிட் அடித்து, தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் கூட்டணியாக மாறி இருக்கிறது.

படம் ட்ராப்
பொல்லாதவன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு போஸ்டர்கள் எல்லாம் ஒட்டப்பட்ட நிலையில், ‘தேசிய நெடுஞ்சாலை' படம் ஆரம்பத்திலேயே சில பல காரணங்களுக்காக ட்ராப் ஆனது. அதன் பின்னர், இருவரும் இணைந்து ஆடுகளம் படத்தை எடுத்து தேசிய விருதையும் பெற்றனர்.

வைரலாகும் போஸ்டர்
இந்நிலையில், தற்போது சமூக வலைதளத்தில் அந்த படத்தின் போஸ்டர் வைரலாகி வருகிறது. வெற்றிமாறன் இயக்க தனுஷ் நடிக்க அந்த படத்திற்கு நா. முத்துகுமார் வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப் போவதாகவும், இன்று முதல் படப்பிடிப்பு என தாறுமாறாக தனுஷ் கையில் பிளேடுடன் அந்த போஸ்டர் மாஸ் காட்டுகிறது.

மீண்டும் உருவாகுமா?
ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வரும் அந்த போஸ்டரை பார்த்த பல நெட்டிசன்களும், படம் இன்னொரு புதுப்பேட்டை, வடசென்னையை போல இருக்குமோ என்றும் மீண்டும் உருவானால் சூப்பராக இருக்கும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், ஏற்கனவே வேறு நடிகர் நடிப்பில் இந்த படம் வெளியாகி விட்டது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

உதயம் NH4
வெற்றிமாறன் திரைக்கதையில் அவரது உதவி இயக்குநர் மணிமாறன் இயக்கத்தில் சித்தார்த் நடித்த உதயம் NH4 படம் தான் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் ட்ராப் ஆன அந்த தேசிய நெடுஞ்சாலை படம் என்றும் கூறி வருகின்றனர். இதன் காரணமாக இந்த படம் மீண்டும் உருவாக வாய்ப்பில்லை என்றும், வடசென்னை படத்தின் அடுத்த பாகங்கள் தனுஷ் நடிப்பில் வெளியாவதும் சந்தேகம் என்றே தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











