ஏமாற்றிய தல, சூர்யா: கடைசி நேரத்தில் தீபாவளி ரேஸில் சேர்ந்த தனுஷ் #ENPTDiwali
சென்னை: தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு வெகுநாட்களாக நடந்தது.
படத்தை எப்ப சார் ரிலீஸ் பண்ணுவீங்க என்று தனுஷ் ரசிகர்கள் கவுதம் மேனனிடம் கேட்டு வந்தனர்.
தீபாவளி
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் வேலைகள் முடிந்துவிட்டது. தீபாவளிக்கு படம் ரிலீஸாகும் என்று கவுதம் மேனன் ட்விட்டரில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள்
எனை நோக்கி பாயும் தோட்டா தீபாவளிக்கு ரிலீஸாகிறது என்பதை அறிந்து தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #ENPTDiwali என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட்டி வருகிறார்கள். இந்த தீபாவளிக்கு விஜய் அண்ணாவுடன் வருகிறோம் என்று தனுஷ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். பதிலுக்கு விஜய் ரசிகர்களும் அவர்களை வரவேற்றுள்ளனர்.

அஜித்
தீபாவளிக்கு அஜித்தின் விஸ்வாசம் வெளியாகும் என்று எதிர்பார்த்து ஏமாந்தனர் தல ரசிகர்கள். மேலும் என்.ஜி.கே. படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று நம்பிய சூர்யா ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். தீபாவளிக்கு வர்றோம் வர்றோம் என்ற படங்கள் வரவில்லை. ஆனால் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் கடைசி நேரத்தில் தீபாவளி ரேஸில் சேர்ந்துள்ளது.
படங்கள்
விஜய், தனுஷ் படங்கள் மோதிக் கொள்வது இது ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே அவர்களின் படங்கள் மூன்று முறை மோதியுள்ளன. இந்நிலையில் நான்காவது முறையாக இந்த தீபாவளி அன்று மோதிக் கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











