நோ விழாக்கள்: கப் சிப்பென்று இருக்கும் தனுஷ்
சென்னை: அனேகன் பட கெட்டப் குறித்து எந்த தகவலும் கசிந்துவிடக் கூடாது என்பதில் குறியாக உள்ளார் தனுஷ்.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் அனேகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் நான்கு வித்தியாசமான கெட்டப்புகளில் வருகிறார். ஆனால் அவர் எந்த மாதிரியான கெட்டப்புகளில் வருகிறார் என்ற தகவல் எதுவும் இல்லை.
இந்நிலையில் கெட்டப் ரகசியத்தை பாதுகாப்பதில் தனுஷ் முனைப்பாக உள்ளாராம்.

நான்கு கால கட்டங்கள்
நான்கு கால கட்டங்களில் நடக்கும் சம்பவங்களை படத்தில் காட்டுகிறார்களாம். இதனால் தனுஷ் இதுவரை இல்லாத அளவுக்கு நான்கு வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கிறார்.

மெனக்கெட்டு
ஒவ்வொரு கெட்டப்பும் சிறப்பாக வர வேண்டும் என்று நினைக்கிறார் தனுஷ். இதனால் நான்கு கெட்டப்புகளுக்கும் கால அவகாசம் எடுத்து நடிக்கிறாராம்.

ரகசியம்
தனுஷ் தான் இதுவரை வந்திராத கெட்டப்புகளில் நடித்து வருகிறாராம். அதனால் தனது கெட்டப் குறித்த விவரங்கள் இம்மி அளவும் கசிந்துவிடாமல் இருக்க அது குறித்து வாய் திறக்க மாட்டேன் என்கிறார். இருப்பினும் ஒரு கெட்டப் பற்றிய போட்டோ லீக்காகிவிட்டது.

நோ விழா
அனேகன் படப்பிடிப்பு முடியும் வரை பொது நிகழ்ச்சிகள், சினிமா விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று தனுஷ் முடிவு எடுத்துள்ளாராம். வழக்கமாக அவர் தான் நடிக்கும் படங்களின் கெட்டப்பை அவ்வப்போது போட்டோ எடுப்பார். ஆனால் இந்த படத்தில் மட்டும் போட்டோவே எடுக்கவில்லையாம்.


Click it and Unblock the Notifications











