ஆசை ஆசையாய் வந்த ரசிகர்.. தடுத்த பவுன்சர்.. உடனே தனுஷ் செஞ்சத பாருங்க.. சூப்பர் மனுஷன்

சென்னை: நடிகர் தனுஷ் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55ஆவது படத்தில் நடித்துவருகிறார். சில வாரங்களுக்கு முன்பு பூஜை நடந்த சூழலில்; சில நாட்களுக்கு முன்புதான் ஷூட்டிங் தொடங்கியதாக கூறப்படுகிறது. அதில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதாம். இந்நிலையில் தன்னை சந்திக்க வந்த ரசிகரை பவுன்சர் தடுத்த சூழலில்; தனுஷ் செய்த செயல் ஒன்று அனைவரிடமும் பாராட்டை பெற்றிருக்கிறது.

தனுஷுக்கு வணிக ரீதியான வெற்றி கிடைத்து நீண்ட காலம் ஆகிவிட்டது. அவர் இயக்கி, நடித்த இட்லி கடை திரைப்படம் வெற்றி பெற்றிருந்தாலும்; எதிர்பார்த்த அளவுக்கு பெரிய சக்சஸ் கிடைக்கவில்லை. விமர்சன ரீதியாக பயங்கரமாக அடி வாங்கியது படம். அந்தப் படம் மட்டுமின்றி அவர் நடித்த குபேரா, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பையே பெற்றன. இப்படி கடந்த வருடத்தில் வந்த அவரது மூன்று படங்களும் அவருக்கு நல்ல நினைவுகளை கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அடுத்த படங்கள்: இந்தப் படங்களுக்கு பிறகு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர படத்தில் நடித்து முடித்தார். கோலிவுட்டில் கவனம் பெற்ற இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் விக்னேஷ். எனவே இப்படம் நல்ல ரெஸ்பான்ஸை பெறும் என்பது தனுஷ் ரசிகர்களின் நம்பிக்கை. அதை காப்பாற்றும் விதமாகத்தான் கடந்த மாதம் வெளியான படத்தின் க்ளிம்ப்ஸ் இருந்தது. படமானது இன்னும் சில மாதங்களில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanush s Humble Gesture Goes Viral Actor Allows Fan Despite Bouncer Block
Photo Credit:

அமரன் இயக்குநருடன் கூட்டணி: கர படத்துக்கு பிறகு இப்போது அவர் அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55ஆவது படத்தில் நடித்துவருகிறார். இதில் அவருடன் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா என பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் படத்துக்கு இசையமைக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு படத்தின் பூஜை நடைபெற்ற சூழலில்; சில நாட்களுக்கு முன்புதான் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. அதில் தனுஷ் தொடர்பான சில காட்சிகளை இயக்குநர் படமாக்கினாராம்.

இந்தப் படமும் க்ளிக் ஆகுமா?: கர படத்தின் மீது எப்படி தனுஷுக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரிய நம்பிக்கை இருக்கிறதோ அதே நம்பிக்கை இந்தப் படத்தின் மீதும் இருக்கிறது. ஏனெனில் இப்படத்துக்கு முன்னதாக ராஜ்குமார் இயக்கியிருந்த அமரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூலித்து கெத்து காண்பித்தது. எனவே அந்த வெற்றியை இதிலும் தக்க வைக்க இயக்குநர் கண்டிப்பாக விரும்புவார். இந்தப் படங்களை எல்லாம் முடித்துவிட்டு பிரமாண்ட பட்ஜெட்டில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அது ஃபேன்டஸ் ப்ளஸ் அரசியல் ஜானரில் உருவாகும் என மாரி சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்ரெண்டாகும் வீடியோ: இப்படி வலுவான லைன் அப்புகளை வைத்திருக்கிறார் தனுஷ். இந்நிலையில் அவர் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது மும்பையில் அவர் பொதுவெளியில் நின்றுகொண்டிருக்கும்போது ரசிகர் ஒருவர் ஆசை ஆசையாய் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வந்தார். ஆனால் அங்கே இருந்த பவுன்சர் அவரை தடுத்து நிறுத்தினார். அதை பார்த்த தனுஷ் உடனடியாக ரசிகரை விடும்படி பவுன்சரிடம் சொல்லிவிட்டு அருகே வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதை பார்த்த நெட்டிசன்கள், தனுஷ் எவ்வளவு நல்ல மனுஷனா இருக்காரு பாருங்க என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X