தனுஷ் குரலில் வெளியான ‘கர’ கண்ணம்மா பாடல்.. எப்படி இருக்கு?

சென்னை: தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கர. வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஏப்ரல் 30ஆம் தேதி இப்படமானது ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்தப் படத்தின் முதல் சிங்கிளான கண்ணம்மா பாடல் வெளியாகி சூப்பர் வரவேற்பை பெற்றிருக்கிறது. தனுஷ் அவ்வளவு உருக்கமாக பாடலை பாடியிருக்கிறார்.

தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான மூன்று படங்களில் இட்லி கடை மட்டும்தான் அவருக்கான பெயரை பெற்றுக்கொடுத்தது. அப்படத்தை அவரே இயக்கி நடிக்கவும் செய்திருந்தார். ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்திருந்தார். படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதேசமயம் குபேரா, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்கள் எல்லாம் மோசமான தோல்வியையே சந்தித்தன. இதனால் உடனடியாக ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறார் தனுஷ்.

Dhanush s Kara Kannamma Song Goes Viral G V Prakash Kumar Melody Impresses
Photo Credit:

விக்னேஷ் ராஜாவுடன் கூட்டணி: அதிகம் இளம் இயக்குநர்களுடன் வேலை செய்ய ஆரம்பித்திருக்கும் தனுஷ்; அந்த வரிசையில் முதல் ஆளாக போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜாவுடன் கூட்டணி வைத்தார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறது. விக்னேஷ் ராஜா தனது முதல் படமான போர்த்தொழிலில் அதீத கவனத்தை ஈர்த்திருந்தார். அதன் காரணமாக இந்தப் படத்தின் மீதும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்திருக்கிறது.

Also Read
அனுமதியே கேட்காமல் அத்துமீறல்.. செம காண்டான நயன்தாரா.. என்ன செஞ்சாங்க தெரியுமா?
அனுமதியே கேட்காமல் அத்துமீறல்.. செம காண்டான நயன்தாரா.. என்ன செஞ்சாங்க தெரியுமா?

நட்சத்திர பட்டாளம்: இதில் தனுஷுடன் மமிதா பைஜு, ஜெயராம், கருணாஸ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் அனைவரது புருவத்தையும் உயர செய்தது. ட்ரெய்லரை பார்க்கையில் அநேகமாக இது தென் மாவட்ட ரூரல் சப்ஜெக்ட்டாக இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. மீண்டும் தனுஷுடன் கூட்டணி அமைத்து வரிசையாக இசையமைத்துவரும் ஜிவி பிரகாஷ்தான் இந்தப் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார்.

முதல் சிங்கிள்: அடமானது ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கண்டிப்பாக இப்படம் தரமான ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் தனுஷ். இந்நிலையில் படத்திலிருந்து கண்ணம்மா என்ற முதல் சிங்கிள் பாடல் ரிலீஸாகியுள்ளது. தனுஷே அந்தப் பாடலை எழுதி பாடவும் செய்திருக்கிறார். காதல் பாடலாக உருவாகியிருக்கும் அப்பாடல் கேட்போரை அப்படியே உருக வைக்கிறது. ஜிவி வழக்கம்போல் சூப்பரான மெலோடியை கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

வரிகளில் கவனம்: பாடலின் இசை ஒருபக்கம் சிறப்பு என்றால் மறுபக்கம் தனுஷின் வரிகளும் அட்டகாசமாக இருக்கின்றன. காதலியை நினைத்து காதலன் பாடுவது போன்ற சூழலில் வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன. அதனை உணர்ந்து வலிகளுடனும் அதேசமயம் எளிமையாகவும் எழுதியிருக்கிறார் தனுஷ். வருங்காலங்களில் இப்பாடல் அனைவரது ப்ளே லிஸ்ட்டிலும் இடம்பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

More from Filmibeat

Read more about: dhanush தனுஷ் கர
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X