தனுஷின் அடுத்த படம் மாரி... முதல் போஸ்டர் வெளியீடு
தனுஷை வைத்து பாலாஜி மோகன் இயக்கும் புதிய படத்துக்கு மாரி என்று தலைப்பு வைத்துள்ளனர்.
வாயை மூடி பேசவும்', ‘காதலில் சொதப்புவது எப்படி' ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகனின் இந்தப் படத்தின் ஷூட்டிங் சில தினங்களுக்கு முன் தொடங்கியது. அப்போது படத்தின் தலைப்பு அறிவிக்கப்படவில்லை.

தனுஷும், நாயகியாக காஜல் அகர்வாலும் முதல் முறையாக ஜோடி சேரும் இந்தப் படத்துக்கு மாரி என்று தலைப்பு வைத்துள்ளனர்.
அத்துடன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிட்டுள்ளனர். தனுஷ் ஒரு தாதா கெட்டப்பில் அசத்தலாகக் காட்சி தருகிறார்.
இப்படத்தை தனுஷின் வொண்டர் பார் நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவை செய்யவுள்ளார்.
வரும் 2015 கோடை விடுமுறையை குறி வைத்து இந்த மாரியை உருவாக்கி வருகின்றனர்.
Comments


Click it and Unblock the Notifications