பொங்கலுக்கு வந்த சூப்பர் செய்தி.. தனுஷ் 54 படத்தின் பெயர் இதுதான்.. வித்தியாசமா இருக்கே
சென்னை: தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் மட்டும் தேரே இஷ்க் மெய்ன், இட்லி கடை, குபேரா ஆகிய மூன்று படங்கள் வந்தன. ஆனால் அவை அனைத்துமே சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை. திருச்சிற்றம்பலம் படத்துக்கு பிறகு வெற்றி கொடுக்க முடியாமல் திணறிவரும் அவர்; அடுத்ததாக போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். இப்போது அந்தப் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷின் நடிப்பு திறமையை சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதை வென்ற அவர் கடைசியாக திருச்சிற்றம்பலம் படத்தைத்தான் ஹிட்டாக கொடுத்தார். அது வெளியாகி சில வருடங்கள் கடந்துவிட்டன. அதற்கு பிறகு நடித்த கேப்டன் மில்லர், ராயன் என எந்தப் படமும் ஓடவில்லை. ராயன் படத்தை அவரே இயக்கியிருந்ததும்; அவருக்கு அது 50ஆவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடத்தில் தனுஷ்: கடந்த வருடத்தை பொறுத்தவரை ஹிந்தியில் தேரே இஷ்க் மெய்ன், தமிழில் இட்லி கடை, தெலுங்கில் குபேரா ஆகிய படங்களில் நடித்தார். மூன்று படங்களில் இட்லி கடை படத்தை அவரே இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று படங்களின் மிதும் தனுஷ் மற்றும் அவரது ரசிகர்கள் பெரிய நம்பிக்கையை வைத்திருந்தார்கள். அவற்றில் இட்லி கடை படம் மட்டும்தான் சொல்லிக்கொள்ளும்படியான ரெஸ்பான்ஸை பெற்றது. அந்தப் படத்தை தனுஷே இயக்கியிருந்தார்.

அடுத்த படம்: தனுஷுக்கு இப்போது ஒரு ஹிட் கண்டிப்பாக தேவைப்படுகிறது. அதற்காக அத்தனை விதமான கதைகளையும் கேட்டு நடித்து பார்த்துவிட்டார். ஆனால் அந்த ஒரு வெற்றி மட்டும் கிடைப்பேனா என்கிறது. எப்படியாவது இந்த வருடத்தையாவது வெற்றியோடு அமைத்திட வேண்டும் என போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். சத்தமே இல்லாமல் இதன் படப்பிடிப்புகள் நடந்துவந்தன. பெரிய எதிர்பார்ப்பை படம் பெற்றிருக்கிறது.
படத்தின் பெயர் கரா: படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவந்தாலும் அதன் பெயர் என்னவென்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்துக்கு கரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயரே வித்தியாசமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள்; பெயரில் மட்டும் இந்த வித்தியாசம் இல்லாமல் படத்தையும் வித்தியாசமாகவும், அனைவரும் ரசிக்கும்படி கொடுக்க வேண்டும் என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
தனுஷின் லைன் அப்: தனுஷின் லைன் அப்பை பொறுத்தவரை அடுத்ததாக அவர் அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து, இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். கண்டிப்பாக இந்த மூன்று படங்களுமே அவருக்கு பெயர் சொல்லும்படியாக அமைய வேண்டும் என வேண்டிக்கொண்டிருக்கின்றனர் தனுஷின் ரசிகர்கள். மேலும் இதே மாதிரி லைன் அப் தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களில் கோலிவுட் முழுக்க தனுஷின் கைகளுக்கு சென்றுவிடும் எனவும் உறுதியாக சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











