கல்லூரி மாணவனாக அதகளப்படுத்தும் தனுஷ்… வாத்தி வேறலெவல் அப்டேட் !

சென்னை : நடிகர் தனுஷின் வாத்தி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று முதல் தொடங்கி உள்ளது.

இந்த தகவலை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளதால், அவரின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும், இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

தனுஷ்

தனுஷ்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் கலக்கிக் கொண்டு இருக்கிறார். சமீபத்தில் தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

வாத்தி

வாத்தி

தனுஷ் நடிக்கவிருக்கும் முதல் நேரடி தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு 'வாத்தி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை வெங்கி அட்லுரி என்பவர் இயக்க உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஹைதராபாத்தில் தொடங்கி உள்ளது.

கெத்தாக தனுஷ்

கெத்தாக தனுஷ்

இத்திரைப்படம் தமிழ்,இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில், நேர்த்தியான உடையில் கல்லூரி மாணவன் போல சும்மா கெத்தாக போஸ் கொடுத்து இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Recommended Video

Galatta Kalyanam Movie Review | Atrangi Re Review in Tamil by Poster Pakiri | Dhanush |Akshay Kumar
கைவசம் உள்ள படம்

கைவசம் உள்ள படம்

தனுஷ் நடிப்பில் தி க்ரே மேன், அத்ரங்கி ரே, மாறன் படங்கள் முடிந்துள்ளன. இதில் தி க்ரே மேன், அத்ரங்கி ரே இரண்டும் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளன. மாறன் திரைப்படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. இது தவிர சன் பிக்சர்ஸின் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

விரைவில்

விரைவில்

செல்வராகவன் பீஸ்ட் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் சாணிக்காயிதம் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். நெல்சன் வெங்கடேசன் இயக்க இருக்கும் புதிய திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் செல்வராகவன் இயக்கும் நானே வருவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X