Don't Miss!
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Lifestyle பளபளப்பான முகத்திற்கு தயிர்-எலுமிச்சை ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- News நாளை முதல் கட்ட லோக்சபா தேர்தல்:102 தொகுதிகளில் 2019-ல் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவு? முழு விவரம்!
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
வேலை இல்லா பட்டதாரி ரூ.50 கோடி வசூல்: தனுஷ் மகிழ்ச்சி
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வேலை இல்லா பட்டதாரி திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். இதனை டுவிட்டரில் கூறியுள்ள தனுஷ் தனது மகிழ்ச்சியையும், நன்றியையும், ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளார்.
தனுஷ் தயாரித்து நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி படத்தை வேல்ராஜ் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் அமலா பால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சுரபி மற்றும் அமித்தேஷ் பிரதான் ஆகியோர் நடித்துள்ளனர்.
விஐபி ஆன தனுஷ்
வேலையில்லாமல் சுற்றி திரியும் பொறியியல் பட்டதாரி நாயகன் அனைத்து எதிர்ப்புகளையும் சமாளித்து தனது பணியில் எவ்வாறு வெற்றி பெறுகிறான் என்பது கதை.
கல்லூரி மாணவர்கள்
இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், இந்த படத்தின் கதை கல்லூரி மாணவர்களிடையே மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல் வாரத்தில் வசூல்
தனது இயல்பான நடிப்பின் மூலம் பொறியியல் படிப்பிற்கு பின் உள்ள வாழ்க்கையை காட்டியுள்ளார். இந்த படம் முதல் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 20 கோடி வசூலித்தது. நடிகர் தனுஷ் நடிப்பில் திரையிடப்பட்ட முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படமாகவும் இது உள்ளது.
ரூ.50 கோடி வசூல்
வேலையில்லா பட்டதாரி படம் இதுவரை ரூ.50 கோடி வசூலித்துள்ளதாக தனுஷ் கூறியுள்ளார். உலக அளவில் தியேட்டர்களில் இந்தப் படம் வெற்றி நடை போடுகிறது என்று டுவிட்டரில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் தனுஷ்.
ரசிகர்கள் வரவேற்பு
ஆடுகளம் தனுஷிற்கு தேசிய விருதை பெற்று தந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றியை பெற்று தரவில்லை. இதனையடுத்து அமைந்த படங்கள் அனைத்துமே தோல்வி படங்கள்தான். எனவே தனுஷிற்கு முக்கியமான வெற்றி படமாக வேலையில்லா பட்டதாரி படம் அமைந்துள்ளது.