திரைப்படங்களை வடக்கு, தெற்கு என பிரித்து பார்க்க வேண்டாம் ... தனுஷ் பேச்சு !
மும்பை : அத்ரங்கி ரே பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், திரைப்படங்களை வடக்கு, தெற்கு என பிரித்து பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
பல விருதுக்கு சொந்தக்காரரான தனுஷ், தமிழை தொடர்ந்து பாலிவுட், ஹாலிவுட்என பட்டையை கிளப்பி வருகிறார். ராஞ்சனா திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அத்ரங்கி ரே தனுஷ் நடித்துள்ளார்.
இப்படம் டிசம்பர் 24ந் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

அத்ரங்கி ரே
ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'அத்ரங்கி ரே'. டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

டிசம்பர் 24-ம் தேதி
இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இப்படம் தமிழில் 'கலாட்டா கல்யாணம்'என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

இந்தியப் படங்கள்
இந்நிலையில், அத்ரங்கி ரே திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தனுஷ், இந்தியத் திரைப்படங்களை வடக்கு, தெற்கு என்று பிரிப்பதை நான் எப்போதும் எதிர்க்கிறேன். அனைத்தும் இந்தியப் படங்கள் என்றே அழைக்கப்பட வேண்டும். தற்போது தென்னிந்தியத் திரைப்படங்கள் உலக அளவில் பிரபலமாவது மிகவும் ஆரோக்கியமானது என்றார்.

மாற்றத்தை நோக்கி
மேலும் பேசிய அவர், அந்த மாற்றத்தை நோக்கி நாம் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறோம். இது நடிகர்கள், திரைப்படங்கள், படைப்பாளிகள் என அனைவரும் உலக அளவிலான மக்களைச் சென்றடைய உதவுகிறது. முதலில் அத்தகைய சாதனையைச் செய்தவர் ரஜினிகாந்த். அவருக்கு ஜப்பான், கனடா, அமெரிக்கா என அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றார்.

பல படங்களில்
தனுஷ் நடிப்பில் தி க்ரே மேன், அத்ரங்கி ரே, மாறன் படங்கள் முடிந்துள்ளன. இதில் தி க்ரே மேன், அத்ரங்கி ரே இரண்டும் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளன. மாறன் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர சன் பிக்சர்ஸின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











