காதல்னாலே ஓவர்ரேட்டட் தான்.. தனுஷ் சொன்னதும் அந்த ஹீரோயின் ரியாக்ஷனை பார்க்கணுமே!
மும்பை: ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் பாலிவுட்டில் நடித்துள்ள "தேரே இஷ்க் மே" திரைப்படம் இந்த மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழில் கைவசம் பல படங்களை வைத்துக் கொண்டு இயக்குநர்களை வரிசையில் காக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் பாலிவுட்டிலும் அதிரடியாக ஒரு படத்தை முடித்துவிட்டார்.
இந்த ஆண்டு ஒரு பக்கம் பிரதீப் ரங்கநாதன் ஹாட்ரிக் ரிலீஸ் செய்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரை முந்திக்கொண்டு தனுஷ் குபேரா, இட்லி கடை படங்களை தொடர்ந்து தேரே இஷ்க் மே படத்தையும் இம்மாத இறுதியிலேயே ரிலீஸ் செய்கிறார்.

நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்ற நிலையில், காதல் என்றால் என்ன நினைக்கிறீங்க என வந்து விழுந்த கேள்விக்கு தனுஷ் ஓவர்ரேட்டட் எமோஷன் என பதிலளித்தது அனைவரையும் ஷாக் ஆக்கியது.
இந்தியில் 4வது படம்: பாலிவுட்டில் இயக்குநர் அட்லி மற்றும் தென்னிந்திய நடிகைகள் தொடர்ந்து கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு சில நடிகர்கள் பாலிவுட்டில் படம் பண்ண முடியுமா என தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தனது 4வது இந்தி படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார் தனுஷ். ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர், இன்னொரு திருமணத்தை தனுஷ் செய்வார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், சினிமா தான் தனக்கு எல்லாமே என தொடர்ந்து பல மாநிலங்களுக்கு பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ராஞ்சனா, ஷமிதாப், அட்ரங்கி ரே என இதுவரை தனுஷ் நடித்த 3 இந்தி படங்கள் வெளியான நிலையில், 4வதாக தேரே இஷ்க் மே திரைப்படம் வரும் நவம்பர் 28ம் தேதி இந்தி மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
சைக்கிள் முதல் ஃபைட்டர் ஜெட் வரை: ராஞ்சனா படத்துக்காக மும்பைக்கு வந்த போது ஆனந்த் எல். ராய் சார் என்னை படத்தில் சைக்கிள் ஓட்ட வைத்தார். ஆனால், இந்த படத்தில் என்னை ஃபைட்டர் ஜெட் ஓட்ட வைத்துள்ளார். எப்போதுமே எனக்கு ஒரு அப்பா போல அவர் சொல்லிக் கொடுப்பதை பார்க்கவே சந்தோஷமாக உள்ளது என்றார்.
காதல் என்றாலே ஓவர்ரேட்டட்: தனுஷ் மற்றும் க்ரித்தி சனோன் இருவரும் மேடையில், இருந்த நிலையில், அவர்களிடம் காதல் என்றால் என்ன? என்கிற கேள்வி வந்து விழுந்தது. முதலில் தனக்கு அதை பற்றி தெரியாது என தனுஷ் சொல்லும் போதே அருகில் இருந்த க்ரித்தி சனோன் வாயை பிளந்து ரியாக்ட் செய்தார். தொடர்ந்து பேசிய தனுஷ், "அதுவொரு ஓவர்ரேட்டட் உணர்வு" என்று காதல் பற்றி பேசியதும், கண்டிப்பாக ஷங்கர் இப்படி சொல்ல மாட்டார் என படத்தின் கதாபாத்திரத்தில் தனுஷ் பெயரை குறிப்பிட்டு க்ரித்தி சனோன் பேச அரங்கமே அதிர்ந்தது.
தனுஷா இப்படி?: காதல் கொண்டேன் படத்தில் நடித்த நடிகரா இப்படி காதல் என்றால் ஓவர்ரேட்டட் என சொல்கிறார் என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். விவாகரத்து ஆன விரக்தியில் தான் காதல் மீதான நம்பிக்கையை தனுஷ் இழந்துவிட்டாரா என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











