இயக்குநர்களே இதுக்கு ஓகேனா வாங்க?.. செம பிஸியான தனுஷ் போடும் கண்டிஷன் இதுவா?

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக அவரது 50ஆவது படமான ராயன் படம் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றது. தற்போது குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கும் தனுஷ்; இட்லி கடை படத்தில் நடித்துவருகிறார். இட்லி கடை படத்தை அவரே இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கியிருக்கிறார். அந்தப் படம் இந்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க அவர் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான தனுஷ் இதுவரை 50 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவர் தனது திறமையை வளர்த்துக்கொண்டே வந்ததால் இந்தியாவிலேயே மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரையும் அவர் பெற்றிருக்கிறார். மேலும் தேசிய விருதுகளையும் அவர் அள்ளியிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ராயன் திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்றது. அந்தப் படத்தை அவரே இயக்கியதும்; அது அவருக்கு 50ஆவது படமென்பதும் குறிப்பிடத்தக்கது.

dhanush kubera idli kadai

வரிசையாக படங்கள்: அடுத்ததாக அவரது நடிப்பில் குபேரா படம் வெளியாகவிருக்கிறது. இதில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சேகர் கம்முல்லா இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் தெலுங்கு மார்க்கெட்டில் தனக்கான ஒரு இடத்தை உறுதி செய்ய காத்திருக்கிறார் தனுஷ். இந்தப் படம் தவிர்த்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். அதில் நித்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: இட்லி கடை படம் மட்டுமின்றி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார். அதில் தனுஷின் உறவினர் ஹீரோவாகவும்; அனிகா சுரேந்திரன் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். படத்திலிருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. படம் இந்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது. மேலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் தனுஷ். அதுமட்டுமின்றி இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், பாலிவுட்டில் ஒரு படம் என நடிப்பிலும் பிஸியாக இருக்கிறார்.

தனுஷ் Vs நயன்தாரா: சூழல் இப்படி இருக்க தனுஷை சுற்றி சர்ச்சைகளும் அதிகரித்திருக்கின்றன. கடந்த வருடம்தான் அவருக்கும் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து நடந்தது. அதேபோல் நடிகை நயன்தாராவுக்கும் தனுஷுக்கும் இடையே மோதலும் வெடித்து; நீதிமன்றத்தில் வழக்கும் போய்க்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

என்ன தகவல்?: அதாவது தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களின் கதை பிடித்துவிட்டால் மொத்தமாக 40 நாட்கள் மட்டுமே கால்ஷீட் தருவேன் என்று கண்டிஷனாக கூறுகிறார் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் தனுஷ் கைவசம் இப்போது ஒரு டஜன் படங்கள் இருப்பதாகவும்; ஏற்கனவே கொடுக்கப்பட்ட ரெட் கார்டு விஷயம் மீண்டும் வந்துவிடக்கூடாது; எனவே கால்ஷீட் 40 நாட்களுக்கு மேல் கிடையாது என்று கூறுகிறாராம். இதனை கேள்விப்பட்ட தனுஷின் ரசிகர்களோ இவ்வளவு பிஸியாக ஒரு நடிகர் இருப்பாரா என்று ஆச்சரியத்துடன் கேள்விகள் எழுப்பிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X