விஜயின் ‘தலைவா’-காக கை கோர்த்த சிம்புவும், தனுஷும்...

சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடபப்ட்ட ரம்ஜான் பண்டிகையன்று வெளியாகி இருக்க வேண்டிய படம் 'தலைவா'. 'தெய்வத்திருமகள்'விஜய் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'தலைவா'. விஜயின் ஜோடி அமலாபால்.

சிலப் பல காரணங்களால் அப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருக்கும் சூழ்நிலையில் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். கோயமுத்தூரில் ஒரு ரசிகர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய்க்கும், அவரது ரசிகர்களுக்கும் தொடர்ந்து திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் ஆறுதல் கூரி வரும் வேளையில், திரைத்துறையில் இரு வேறு துருவங்களாக கருதப்பட்ட சிம்புவும் தனுஷ்ம், விஜய்க்கு ஆதரவாக ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளனர்.

விஜய் அண்ணா...

விஜய் அண்ணா...

இது குறித்து ட்வீட் செய்துள்ள சிம்பு, ‘விஜய் அண்ணா ரசிகர்களே, கவலைப்படாதீர்கள்... எப்போதும் மழை பொழிந்து கொண்டே இருக்காது. விரைவில் சூரிய வெளிச்சம் உதயமாகும். அதுவரை அமைதியாகவும், பொறுமையாகவும் இருங்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்...' எனத் தெரிவித்துள்ளார்.

ரொம்ப கவலையாருக்குங்கண்ணா....

ரொம்ப கவலையாருக்குங்கண்ணா....

மேலும்,இப்பிரச்சினை குறித்துக் கேள்விப்பட்டு தான் மிகவும் கவலைப்பட்டதாகவும், விரைவில் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என தான் நம்புவதாகவும் கூறியுள்ளார் சிம்பு.

இது நியாயமேயில்லீங்க...

இது நியாயமேயில்லீங்க...

நடிகர் தனுஷின் ட்வீட்டர் பக்கத்தில், 'தலைவா படத்திற்கு நேர்ந்தது நியாயமற்றது. இதுபோன்று திரைப்படங்களை தடை செய்வதை விட்டு விட்டு, இந்த நாட்டின் மீது அக்கறை செலுத்தினால் நல்லது ', என்று கடுமையாக சாடியுள்ளார்.

கருத்து வெள்ளம்...

கருத்து வெள்ளம்...

தலைவா பட விவகாரத்தில் திரைத்துறையினர் மத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பலத்த குரல்கள் எழுப்பப்படுகின்றன. சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவான கருத்துகள் வெள்ளம் போல் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X