தனுஷ் மருமகனுக்கு 2வது படமாவது கை கொடுக்குமா?.. லவ் ஓ லவ் டீசர் எப்படி இருக்கு?
சென்னை: நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் கடந்த ஆண்டு 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படத்தை தனுஷ் தான் இயக்கினார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அபிஷன் ஜீவிந்த், கென் கருணாஸ் உள்ளிட்டவர்கள் ஹீரோக்களாக நடித்த படங்கள் எல்லாம் இந்த ஆண்டு வசூல் வேட்டையாடி வரும் நிலையில், கெட்டப் மாற்றி நடித்துள்ள பவிஷுக்கு லவ் ஓ லவ் படம் கைகொடுக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் வெளியான படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் லவ் டுடே படத்தை போலவும், யூத் படத்தை போலவும் முயற்சி செய்து உருவாக்கியுள்ளனர் என்றும் இளைஞர்களை கவர்ந்து விட்டால் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்றும் கூறியுள்ளனர்.
கிரெடிட் கார்டு கதை: லவ் ஓ லவ் திரைப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். பவிஷுக்கு ஜோடியாக தெலுங்கு இன்ஸ்டா பிரபலம் நாக துர்கா நடித்துள்ளார். மேலும், செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிரெடிட் கார்டு வைத்துக் கொண்டு காதலிக்கு தேவையானதை கடன் மூலம் வாங்கி கஷ்டப்படும் இளைஞனின் கதையாக இருக்கும் என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது. சமீப காலமாக கிரெடிட் கார்டு பயன்பாடு மற்றும் மோசடி காரணமாக பல இளைஞர்கள் கடனில் சிக்கித் தவித்து வரும் நிலையில், அதுதொடர்பான விழிப்புணர்வு மெசேஜும் படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவிஷுக்கு ஹிட் கிடைக்குமா?: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் புரொடக்ஷன் ரீதியாகவும் அந்த படத்தில் நடித்த இளம் நடிகர்கள் பட்டாளங்கள் மூலமாகவும் தனுஷ் இயக்கம், ஜி.வி. பிரகாஷ் குமார் இசை, கேமியோவாக பிரியங்கா மோகன் என ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தும் பவிஷுக்கு வெற்றியை தரவில்லை. இந்த டீசரை பார்த்தாலும் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை என்றாலும் இளைஞர்களை கனெக்ட் செய்யும் விஷயங்கள் உள்ள நிலையில், முழுப் படம் வெளியானால் தான் படம் தேறுமா? தேறாதா? என்பது தெரிய வரும். டீசர் வரை பார்த்தால் ஒரு அபவ் ஆவரேஜாகத்தான் தெரிகிறது.


Click it and Unblock the Notifications