ரஜினி வீட்டுக்கு பக்கா ஸ்கெட்ச்?.. சினிமாவில் மகனை களமிறக்கிய தனுஷ்.. ஷாக்கில் போயஸ் கார்டன்?
சென்னை: இந்திய அளவில் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். அவரது நடிப்பில் கடைசியாக ராயன் படம் வெளியானது. அவரே இயக்கியிருந்த அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவரும் அவர்; நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியும்வருகிறார். இதில் அனிகா, ப்ரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ப்ரியங்கா மோகன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் செய்திருக்கிறார்.
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ராயன், கேப்டன் மில்லர், வாத்தி ஆகிய மூன்று படங்களுமே சரியாக போகவில்லை. இந்த மூன்று படங்களையுமே அவர் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். முக்கியமாக கேப்டன் மில்லர் அருண் மாதேஸ்வரன் இயக்கம் என்பதாலும், ராயனை தானே இயக்கியதாலும் இரண்டு படங்களும் பந்தயம் அடிக்கும் என்று காத்திருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முக்கியமாக ராயன் தனுஷுக்கு 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரோலான ராயன்: தியேட்டரில் வெளியானபோதுகூட படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. ஆனால் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ராயன் வெளியான பிறகு ஒட்டுமொத்தமாக காலியானது. படத்தை அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்து மேய்ந்துவிட்டனர் நெட்டிசன்கள். ஒவ்வொரு சீனையும் டீகோட் செய்து இயக்கத்தில் தனுஷ் பண்ணிய தவறுகளை போட்டுடைத்தனர். மேலும் படத்தில் வடசென்னை, க்ளைமேக்ஸில் ஆடுகளம் உள்ளிட்ட படங்களின் வாடை அடித்தது என்பதும் உண்மைதான்.
அப்செட்டில் தனுஷ்: இந்தப் படத்தை அவர் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். எப்படியாவது 50ஆவது படத்தை ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தவருக்கு கிடைத்த ரிசல்ட் அப்செட்டை கொடுத்திருக்கிறது. இப்போது அவர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார் இதனையடுத்து இளையராஜா பயோபிக், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு படம் என படு பிஸியாக லைன் அப் வைத்திருக்கிறார்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: இதற்கிடையே இயக்கத்திலும் பிஸியாக இருக்கிறார் தனுஷ். அடுத்ததாக அவர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கிவருகிறார். இதில் தனுஷின் உறவினர் பையன், அனிகா சுரேந்தர், ப்ரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிளான கோல்டு ஸ்பேரோ பாடல் வெளியாகவிருக்கிறது. இந்தப் பாடலுக்கு ப்ரியங்கா மோகன் நடனமாடியிருக்கிறார்.
மகனை களமிறக்கிய தனுஷ்: இந்நிலையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் தனது மூத்த மகன் யாத்ராவை களமிறக்கியிருக்கிறார் தனுஷ். அதாவது கோல்டு ஸ்பேரோ பாடலை யாத்ராதான் எழுதியிருக்கிறாராம். இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். அதேசமயம் இந்த விஷயத்துக்கு பின்னால் ஒரு பக்கா பிளான் இருப்பதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். அதாவது ஐஸ்வர்யாவை பிரிந்திருக்கிறார் தனுஷ்.
தனது மகனை ஐஸ்வர்யாவோ இல்லை ரஜினி வீட்டிலிருந்து யாரோ ஒருவர் சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே தான் அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்றும்; இப்போது பாடலாசிரியராக அறிமுகப்படுத்தி பிறகு நடிகராக இண்ட்ரோ செய்ய வேண்டும். அப்படி அறிமுகப்படுத்தி ரஜினி வீட்டுக்கு பெரும் ஷாக் கொடுக்க வேண்டும்; அதுமட்டுமின்றி மகனிடம் இருந்த திறமையை தான்தான் கண்டுபிடித்தேன் என்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தனுஷ் இந்த மூவை செய்திருப்பதாக சொல்கிறார்கள். எது எப்படியோ யாத்ரா சினிமாவில் பாடலாசிரியராக மட்டும் தொடர்வாரா இல்லை ஹீரோவாகவும் ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











