ஒருவேள சாப்பாட்டுக்கே வக்கில்லாம இருந்திருக்கேன்.. ஒரு செங்கல்லை கூட ஆட்டமுடியாது.. தனுஷ் சரவெடி!
சென்னை: இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. வழக்கம் போல இந்த முறையும் தமிழர்களின் பாரம்பரியமான வேட்டி, சட்டையில் நிகழ்ச்சிக்கு வந்த தனுஷ் கடைசியாக மேடையேறி பேசும் போது, ஒருவேள சாப்பாட்டுக்கே வக்கில்லாம இருந்திருக்கேன் என்றும் தன்னைச் சுற்றி பரவும் எதிர்மறை கருத்துக்கள் குறித்தும் பேசியுள்ளார்.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ், அப்பா இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்துக்கு செல்வராகவன் கதை எழுதியிருந்தார். அதன் பின்னர், தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கி இயக்குநராக செல்வராகவன் அறிமுகமானார்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துக் கொண்ட தனுஷ், சில பிரச்னைகள் காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். ஆனாலும், தனது மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் மனைவியுடன் கலந்துக் கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
என்னைச் சுற்றி ஏகப்பட்ட நெகட்டிவிட்டி: நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் இடையே சமீபத்தில் சட்ட போராட்டமும் சோஷியல் மீடியா சண்டையும் வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், எந்த பிரபலத்துக்கு விவாகரத்து ஆனாலும், அதற்கு தனுஷ் தான் காரணம் என சினிமா வட்டாரத்தில் தேவையற்ற வதந்திகளை சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். தன்னைச் சுற்றி பரவும் நெகட்டிவிட்டிகள் குறித்து நேற்று நடைபெற்ற குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வெளிப்படையாகவும் அதற்கு தகுந்த பதிலடியும் தனுஷ் கொடுத்துள்ளார்.
ஒரு செங்கல்லை கூட ஆட்டமுடியாது: நாலு வதந்திகளை கூறி என்னை காலி பண்ணலாம்னு நினைச்சா, ஒரு செங்கல்லை கூட ஆட்டமுடியாது. இத்தனை நெகட்டிவிட்டிகளுக்குப் பிறகும் எனக்காக இத்தனை ரசிகர்கள் கூட்டம் இருக்குன்னா, உங்க அன்பும் மேலிருந்து கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி என்னை கை பிடித்துக் கொண்டு வழி நடத்துதே அந்த சக்தியும் என்னை எப்பவுமே கை விடமாட்டாங்க, தம்பிங்களா கொஞ்சம் தள்ளிப்போய் விளையாடுங்க என தனது ஹேட்டர்களுக்கு தரமான பதிலடியை தனது பேச்சின் மூலம் கொடுத்துள்ளார் தனுஷ்.
ஒருவேளை சாப்பாட்டுக்கே வக்கில்லாம இருந்தேன்: சினிமாவில் தன்னுடன் 23 ஆண்டுகளாக தனக்காக இருக்கும் ரசிகர்கள் கூட்டம் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லை, நீங்கள் எல்லாம் என்னுடைய கம்பேனியன் (companion), வழித்துணை என்னை எப்போதும் இருளில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்லும் தீப்பந்தங்கள் தான் என்னுடைய ரசிகர்கள், இவர்கள் என்கூட இருக்க வரைக்கும் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வக்கில்லாம இருந்திருக்கேன், இன்னைக்கு நல்ல நிலைமையில இருக்கேன். ஆனால், எப்போதுமே மன நிம்மதியுடன் இருக்க வேண்டும். அதுதான் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம்.
உங்களுக்குள்ள தேடுங்க: உங்களோட சந்தோஷம் மற்றும் மன நிம்மதியை வெளியே தேடாதீங்க, அதை உங்களுக்குள்ள தேடுங்க, அதுதான் உங்களை கடைசி வரைக்கும் ஹேப்பியா இருக்க வழிநடத்தும். ரொம்ப லேட் ஆகிடுச்சு, பல ஊர்களில் இருந்து வந்திருக்கும் தம்பிங்களா பார்த்துப் போங்க, என்னோட வண்டியை பின் தொடர வேண்டாம், அதை நான் ஒரு போதும் என்கரேஜ் பண்ண மாட்டேன். எனக்கு உங்களுடைய சேஃப்ட்டி தான் ரொம்ப முக்கியம் என பேசி முடித்தார்.


Click it and Unblock the Notifications











