ஒரு கோடி ரூபாய் சம்பாதிச்சா இரண்டு கோடி ரூபாய்க்கு பிரச்னை.. குபேரா தனுஷ் இப்படி சொல்லிட்டாரே

சென்னை: தனுஷ் கடைசியாக கடைசியாக தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.ஜூன் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பு நிலவிவரும் சூழலில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அவர் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் தனுஷ். அவர் கடைசியாக ராயன் திரைப்படத்தில் நடித்தார். அவரது 50ஆவது படமான அதனை அவரே இயக்கி நடிக்கவும் செய்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஏற்கனவே தனுஷ் இயக்கியிருந்த பவர் பாண்டி திரைப்படம் மெகா ஹிட்டானது. எனவே இயக்குநராகவும், நடிகராகவும் 50ஆவது படத்தில் கண்டிப்பாக வென்றுவிடுவார் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் படம் படுதோல்வியைத்தான் சந்தித்தது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: நடிகராக தோல்வியடைந்த தனுஷ் இயக்குநராக இன்னொரு வெற்றியை பெற நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கின. இதில் அவரது சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக நடித்திருந்தார். அனிகா உள்ளிட்டோரும் நடித்திருந்தார். காதல் கதை ஜானரில் உருவாகியிருந்த அப்படம் டிராகனுக்கு போட்டியாக களமிறங்கியது. ஆனால் டிராகன் கக்கிய வெப்பத்தை தாக்குப்படிக்க முடியாமல் அதுவும் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Dhanush Speech in Kubera Trailer Launch here are details
Photo Credit:

அடுத்த படம்: இதற்கிடையே ராயன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே சேகர் கம்முல்லாவின் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் தனுஷ். ஏற்கனவே வாத்தி படத்தில் நடித்து கையில் சூடுபோட்டுக்கொண்ட அவர் மீண்டும் ஏன் தெலுங்கு இயக்குநருடன் கைகோர்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டனர். ஆனால் வாத்தி படத்தில் விட்டதை இந்தப் படத்தில் பிடித்து தெலுங்கில் தனக்கென தனி மார்க்கெட்டை நிலைநாட்டும் நோக்கத்தில் அவர் இருக்கிறார் என திரைத்துறையில் பேச்சு ஓடுகிறது.

குபேரா: படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. குபேரா என்று பெயர் வைத்தாலும் ஃபர்ஸ்ட் லுக்கில் தனுஷ் தாடியும், தம்பட்டையுமாக பிச்சைக்காரர் போல் இருந்தது கவனத்தை ஈர்த்தது. இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷின் கெட்டப்பே வேற மாதிரி இருக்கிறதே. அப்போ கதை எப்படி இருக்கும் என்று சமூக வலைதளங்களில் ஆர்வத்தோடு பேச ஆரம்பித்தனர். படத்தில் தனுஷுடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

பெரிய எதிர்பார்ப்பு: முதன்முறையாக சேகர் கம்முல்லாவுடன் தனுஷ் இணைந்திருப்பதால் பெரிய எதிர்பார்ப்பை படம் சாம்பாதித்திருக்கிறது. முதலில் வெளியான டீசர் நல்ல வரவேற்பை கொடுத்த சூழலில்; நேற்று வெளியான ட்ரெய்லரும் பெரிய ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. அதனை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக குபேரா பந்தயம் அடிக்கும் என்று ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

தனுஷின் பேச்சு: இந்நிலையில் குபேரா படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், "150 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவருக்கு 200 ரூபாய்க்கு பிரச்னை இருக்கும். ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பவருக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு பிரச்னை இருக்கும். அனைவருக்கும் ஒரே பிரச்னைதான் இருக்கின்றன" என்றார். அவரது இந்தப் பேச்சு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X