மனுஷன்னா இப்படி இருக்கணும்.. நெருங்க விடாமல் தடுத்த பவுன்சர்.. பார்வையிலேயே பதற வைத்த தனுஷ்

சென்னை: தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் குபேரா, தேரே இஷ்க் மெய்ன், இட்லி கடை ஆகிய படங்கள் வந்தன. மூன்று படங்களில் இட்லி கடை மற்றும் சூப்பர் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர படம் வரவிருக்கிறது. நேற்று வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ரெண்டாகியுள்ளது. தற்போது அவர் அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் செய்த செயல் ஒன்றை ரசிகர்கள் பாராட்டிவருகிறார்கள்

இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் தனுஷ். அவர் சினிமாவுக்குள் வந்தபோது பலர் அவரை கிண்டல் செய்தார்கள். இப்போது அவருடைய வளர்ச்சியை பார்த்து அவர்கள் வாயடைத்து போயிருக்கிறார்கள். நடிப்பு மட்டுமின்றி பாடல்கள் பாடுவது, எழுதுவது என இருந்த அவர்; பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். இப்படி படு பிஸியாக இருக்கும் அவரை பார்த்து பலரும் ஆச்சரியம்தான் படுகிறார்கள். தனுஷுக்கு கடந்த சில வருடங்களாகவே பெரிய ஹிட் எதுவும் இல்லை. கடந்த வருடத்தில் மட்டும் மூன்று படங்களில் நடித்தார். அவற்றில் இட்லி கடை படத்தை இயக்கி நடித்தார். இட்லி கடை அவருக்கு நல்ல வசூலை கொடுத்தது. அதற்கு பிறகு ஹிந்தியில் தேரே இஷ்க் மெய்ன் ரிலீஸானது.

Dhanush Stops Bouncer From Blocking Fans Wins Praise Online
Photo Credit:

பாலிவுட்டில் தோல்வி: இட்லி கடை கொடுத்த வெற்றி தேரே இஷ்க் மெய்ன் படத்திலும் வரும் என்றுதான் எதிர்பார்த்திருந்தார்கள் அவரும் அவரது ரசிகர்களும். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. பழைய கால கதையை எடுத்ததுகூட பரவாயில்லை; அதை கொஞ்சமாவது பட்டி டிங்கரிங் பார்க்காமல் பழையபடியே எடுத்த ஆனந்த் எல்.ராய் ரொம்பவே ஏமாற்றிவிட்டார் என்று படம் பார்த்த ரசிகர்கள் விமர்சனத்தை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடித்த குபேராவும் சுமார் ரகம்தான்.

போர்த்தொழில் இயக்குநருடன்: இதற்கிடையே தமிழில் அவர் கைவசம் ஏராளமான படங்கள் இருக்கின்றன. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதுமட்டுமின்றி போர்த்தொழில் படத்தை இயக்கி பெரிய கவனத்தை ஈர்த்த விக்னேஷ் ராஜா இயக்கத்திலும் கர படத்தில் நடிக்க கமிட்டானார். போர்த்தொழில் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதால் இந்தக் கூட்டணி பற்றிய அறிவிப்பு வந்ததுமே ஓவர் ஹைப் ஏறியது.

Also Read
பொல்லாதவன் படத்துக்கு முன்னாடியே.. சிம்புவின் அரசன் பட சீக்ரெட் சொன்ன வெற்றிமாறன்
பொல்லாதவன் படத்துக்கு முன்னாடியே.. சிம்புவின் அரசன் பட சீக்ரெட் சொன்ன வெற்றிமாறன்

ஃபர்ஸ்ட் சிங்கிள் அவுட்: படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் பெரிய வரவேற்பை பெற்றன. அடுத்ததாக நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸானது. வழக்கம்போல் இதுவும் சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இப்படமானது ஏப்ரல் 30ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இப்படம் தரமான பந்தயம் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவரது செயல் ஒன்று ரசிகர்களிடையே பாராட்டை பெற்றிருக்கிறது.

என்ன நடந்தது?: அதாவது கென் கருணாஸ் யூத் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அவர் தனுஷிடம்தான் உதவி இயக்குநராக இருந்தார். எனவே தனது சிஷ்யன் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் கலந்துகொண்டார். மேடையில் பேசிவிட்டு கீழே வந்த அவரிடம் சில பத்திரிகையாளர்கள் நெருங்கி வந்து புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டார்கள். ஆனால் ஒரு பவுன்சர் அவர்களை தடுத்து நிறுத்த சென்றார். உடனே அவர்களை கடுமையாக முறைத்த தனுஷ்; தன்னிடம் வந்தவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தனுஷ் முறைத்ததும் பெட்டி பாம்பாக அடங்கிவிட்டார் அந்த பவுன்சர்.

More from Filmibeat

Read more about: dhanush தனுஷ் கர
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X