குப்பைத் தொட்டியில் குபேரா ஷூட்டிங்.. ராஷ்மிகாவுக்கு நாற்றமே அடிக்கவில்லை.. தனுஷ் ஓபன் டாக்

சென்னை: சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் குபேரா. இதில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜூன் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதன் காரணமாக படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. இந்நிலையில் தனுஷ் பேசிய பேச்சு ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அப்படத்தை அவரே இயக்கியிருந்தார். மேலும் அது அவருக்கு ஐம்பதாவது படம். தனது 50ஆவது படத்தை அவரே இயக்குகிறார் என்பதன் அறிவிப்பு வந்ததிலிருந்து அப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா, காளிதால், சந்தீப் கிஷன், அபர்ணா, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

படு ஃப்ளாப்: படம் ரிலீஸாவதற்கு முன்னதாக ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஹ்மானும், தனுஷும் சேர்ந்து பாடிய, 'அடங்காத அசுரன்தான்' பாடலை பார்த்து படம் மேற்கொண்டு ஹைப்பை ஏற்றியது. இப்படி ஏகப்பட்ட ஹைப்புகளோடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு படம் பெரிய திருப்தியை கொடுக்கவில்லை. 90களில் வந்த அண்ணன், தம்பி பாச கதைகளையும், வெற்றிமாறன் இயக்கத்தில் வந்த வடசென்னை படத்தின் கதையையும் சேர்த்து ஒரு கலவையாக்கி கொடுத்தார் தனுஷ் என்ற விமர்சனம் பலமாகவே எழுந்தது. அதுமட்டுமின்றி உண்மையில் பவர் பாண்டி படத்தை தனுஷ்தா இயக்கியிருப்பாரா என்ற சந்தேகத்தையும் பலர் முன்வைத்தார்கள்.

Dhanush talks about his experience working with Rashmika Mandanna in Kubera
Photo Credit:

அடுத்த படம்: இதற்கிடையே ராயன் படத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோதே சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடிக்க கமிட்டானார் தனுஷ். இதில் அவருடன் தெலுங்கு நட்சத்திரங்கள், தமிழ் நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். அதேசமயம் ஏற்கனவே வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வாத்தி படம் தோல்வியடைந்தது. அந்த சமயத்தில் தெலுங்கு மார்க்கெட்டுக்கு ஆசைப்பட்டு தன்னுடைய கையில் தனுஷ் சூடுபோட்டுக்கொண்டார் என்றே ஓபனாக பேசப்பட்டது.

எனவே மீண்டும் ஏன் அவர் தெலுங்கு இயக்குநருடன் கைகோர்க்க வேண்டும் என்ற கேள்விகளும் எழுந்தன. ஆனால் சேகர் கம்முல்லாவை வைத்து தெலுங்கு மார்க்கெட்டை பலமாக பிடிக்க திட்டிமிட்டும்; அவர் சொன்ன கதையில் தன்னால் நடித்து மேற்கொண்டு உயர முடியும் என்ற நம்பிக்கை இருந்ததால்தான் தனுஷ் ஒத்துக்கொண்டார் என்ற பேச்சும் இருக்கிறது. அதைத்தான் படத்தின் டீசரும் உணர்த்தியது. படமானது ஜூன் 20ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

தேசிய விருது கன்ஃபார்ம்?: தனுஷுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சமீபத்தில் பேசியிருந்த சேகர் கம்முல்லா, 'தனுஷ் இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் கேரக்டரை மிக சிறப்பாக செய்திருக்கிறார். கண்டிப்பாக அவருக்கு இன்னொரு தேசிய விருது வாய்ப்பு இருக்கிறது' என்றார். அதனைப் பார்த்த ரசிகர்களோ, அப்போ கண்டிப்பா தனுஷ் இப்படத்தில் ஃபெர்பார்மன்ஸில் பின்னியெடுத்திருப்பார் என்று ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் தனுஷின் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

என்ன வீடியோ: அதாவது படத்தின் ரிலீஸுக்கு இன்னும் பத்து நாட்கள் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகள் நடந்துவருகின்றன. அந்தவகையில் மும்பையில் ப்ரோமோஷன் நடந்தது. அதில் கலந்துகொண்ட தனுஷ், 'சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடித்தது எனக்கு நல்ல அனுபவங்களை கொடுத்தது. அதேசமயம் கொஞ்சம் மோசமான அனுபவத்தையும் கொடுத்தது. எனக்கும் ராஷ்மிகாவுக்கும் குப்பைத் தொட்டியில் கிட்டத்தட்ட ஆறிலிருந்து ஏழு மணிநேரம் வரை ஷூட் இருந்தது. அப்போது நான் ராஷ்மிகாவிடம் என்ன இப்படி நாற்றம் அடிக்கிறது என்றேன். அதற்கு அவரோ சார், எனக்கு எதுவுமே நாற்றம் அடிக்கவில்லையே என்றார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படம் கண்டிப்பாக அனைவரையும் கவரும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X