தங்கம்யா.. சிவகார்த்திகேயன் மனைவியிடம் நலம் விசாரித்த தனுஷ்.. எஸ்கே முகத்துல சந்தோஷத்தை பாருங்க!
சென்னை: இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இயக்குநர் விக்னேஷ் சிவனின் உதவி இயக்குநராக இருந்தவர் தான் ஆகாஷ் பாஸ்கரன் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருமணத்துக்கு வந்த நிலையில், இட்லி கடை படத்தின் இயக்குநரும் நடிகருமான தனுஷும் திருமணத்துக்கு வந்திருந்தார். அவர்கள் இருவரும் அருகருகே ஒரே ஃபிரேமில் அமர்ந்திருக்கும் காட்சிகள் தான் தற்போது சோஷியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

அதே திருமண விழாவில் சிவகார்த்திகேயனும் கலந்துக் கொண்ட நிலையில், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் பேசிக் கொள்ள வாய்ப்பு இல்லை என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் பேசிக் கொண்டதும், சிவகார்த்திகேயன் மனைவியிடம் தனுஷ் நலம் விசாரித்த காட்சிகளும் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளன.
அப்பா, அண்ணன் தயவில்: நடிகை நயன்தாரா தனுஷ் நானும் ரவுடி தான் படக் காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் கொடுக்க 10 கோடி ரூபாய் கேட்டார் என எழுதிய கடிதத்தில் ஆரம்பத்திலேயே கஸ்தூரி ராஜாவின் மகன், செல்வராகவனின் தம்பி எனக் குறிப்பிட்டு இருந்தது பலரையும் அப்செட் ஆக்கியது. கஸ்தூரி ராஜா மற்றும் செல்வராகவன் சினிமாவில் சாதிக்காத உயரத்தையே தனுஷ் தனது விடாமுயற்சியால் சாதித்துக் காட்டினார் என பலரும் அவரை பாராட்டி ஆதரவு தெரிவிக்க அந்தவொரு விஷயமே காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தனுஷுக்கு நன்றி: அமரன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசும் போது கூட நடிகர் தனுஷ் தனக்கு எதிர்நீச்சல் படத்துக்காக எழுதிக் கொடுத்த வரிகளை குறிப்பிட்டு சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனுஷை பார்த்துவிட்டு நயன்தாரா ஒதுங்கி சென்றது போல சிவகார்த்திகேயன் செல்லாமல் அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
சிவகார்த்திகேயன் மனைவியிடம் பேசிய தனுஷ்: சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி தனுஷை சந்தித்துப் பேசும் போது, ஆர்த்திக்கு வணக்கம் தெரிவித்து தனுஷ் நலம் விசாரித்துள்ளார். அப்போது க்ளிக் செய்யப்பட்ட புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

கால் மேல் கால் போட்டு: நடிகர் தனுஷ் இந்த பக்கத்திலும், அதற்கு அருகே கொஞ்சம் தள்ளி நடிகை நயன்தாரா கால்மேல் கால் போட்டு செம கெத்தாக உட்கார்ந்து இருக்கும் காட்சிகளும் இணையத்தில் தீயாக வலம் வருகின்றன. நடிகர் தனுஷ் வாய்ப்புத் தரவில்லை என்றால் விக்னேஷ் சிவன் இந்தளவுக்கு இயக்குநர் ஆகியிருக்க மாட்டார் என்றும் நயன்தாராவே கிடைத்திருக்க மாட்டார் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











