யுவன் இல்லை என்றால் நடுத்தெருவுக்கு வந்திருப்போம்: தனுஷ் உருக்கம்

By Siva

சென்னை: யுவன் ஷங்கர் ராஜா இல்லை என்றால் தன் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள மாரி 2 படம் வரும் 21ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்து பேசியது.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது தனுஷ் கூறியதாவது,

சவால்

சவால்

மாரி 2 பக்கா குடும்ப கமர்ஷியல் பொழுதுபோக்கு படம். இதில் காதல், காமெடி, நல்ல கதை, வில்லன் எல்லாம் உண்டு. எனக்கு வடசென்னை படத்தை விட மாரி படத்தில் நடிப்பது தான் சவாலாக இருந்தது. மாரியாக நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மாரி கெட்டப்பில் வந்து அவர் போன்றே பேச நினைத்தேன். ஆனால் சர்ச்சையை தவிர்க்க அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டேன்.

பன்ச் வசனம்

பன்ச் வசனம்

இயக்குனர் பாலாஜி மோகன் என் குடும்பத்தில் ஒருவர் போன்று. ஃபார்மாலிட்டிக்காக அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்பவில்லை. 'If you are bad, I'm your dad' என்ற வசனம் சூப்பர் ஹிட்டாகிவிட்டது. அந்த வசனத்தை கூறியதே அடிதாங்கி வினோத் தான். நான் இல்லை. விவாதம் ஒன்றின்போது அவர் தான் பரிந்துரை செய்தார்.

இசை

இசை

சில பேர் தப்பா நினைத்தாலும் பரவாயில்லை . 20 வருடமாக எதிர்ல இருக்கும் இசையமைப்பாளரின் பெயர் மாறி கொண்டே இருக்கிறது. ஆனால் யுவன் அப்படியே இருக்கிறார். துள்ளுவதோ இளமை படத்தில் யுவன் இல்லை என்றால் நான் இல்லை. என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும். அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே யுவன் ஷங்கர் ராஜா தான். அது மட்டும் அல்ல காதல் கொண்டேன் வெற்றிக்கும் அவரே காரணம். அவர் அஜித் சார் படத்திற்கு இசையமைக்க உள்ளதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது.

மாரி 3

மாரி 3

சாய் பல்லவி இயற்கையாகவே அழுவார். படப்பிடிப்பு தளத்தில் அழச் சொன்னதும் அழுவார். ஏதோ மெதட் நடிகை என்று நினைத்தேன். மாரி 2 படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்துவிட்டு மாரி 3 எடுப்போம். இந்த படத்தை சர்வதேச அளவில் எடுத்துள்ளோம், மக்களுக்கு தேவையான மெசேஜ் உள்ளது என்று எல்லாம் சொல்ல மாட்டேன்.

சீதக்காதி

சீதக்காதி

தம்பி சிவகார்த்திகேயனின் ‘கனா', நண்பர் விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி' உட்பட இந்தவாரம் வெளியாகும் அனைத்துப் படங்களும் வெற்றியடைய வாழ்த்துகள். 21ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய காரணம் உள்ளது என்று தனுஷ் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X