இளையராஜா பயோபிக்லாம் இல்லை.. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறில் தனுஷ்.. யார் இயக்குநர் தெரியுமா?

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்து அவர் நடித்திருக்கும் குபேரா, இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. இதற்கிடையே இளையராஜாவின் பயோபிக்கிலும் அவர் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்கு பிறகு படத்தின் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. சூழல் இப்படி இருக்க அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடிகர், இயக்குநர் பல முகங்களை கொண்டவர் தனுஷ். அவர் தனது 50ஆவது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்போடு படம் வெளியானாலும் தோல்வியையும், ட்ரோலையும் சந்தித்தது. தொடர்ந்து தனது சகோதரி மகன் பவிஷை வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் டிராகன் படத்துக்கு போட்டியாக களமிறங்கி மண்ணை கவ்வியது அந்தப் படம். தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் டல்லாகவே காணப்படுகிறார்கள்.

இட்லி கடை: இரண்டு படங்களுக்கு பிறகு அவர் இட்லி கடை படத்தை இயக்கி நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க; முக்கியமான் ரோலில் அருண் விஜய்யும் நடித்திருக்கிறார். இப்படம் முதலில் ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்தது. ஆனால் படக்குழு முடிவு செய்திருந்த தேதியில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. எனவே படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. மேலும் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஸ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையும் நடந்தது. அதன் காரணமாக ரிலீஸில் மேற்கொண்டு தாமதம் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

ஹிந்தியில் தனுஷ்: இட்லி கடை படம் தவிர்த்து ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் என்ற ஹிந்தி படத்திலும் நடித்துவருகிறார். மேலும் மாரி செல்வராஜ், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து, அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரின் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார் அவர். அவர் கமிட்டாகியிருக்கும் இயக்குநர்கள் எல்லோருமே மெகா ஹிட்டுகளை கொடுத்தவர்கள் என்பதால் அடுத்தடுத்த படங்கள் மீது அதீத நம்பிக்கையை ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள்.

Dhanush to Act in Abdul Kalam biopic here are details

இளையராஜா பயோபிக்: இதற்கிடையே இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறில் தனுஷ் நடிக்க கமிட்டானார். அதனை மெர்குரி பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. மேலும் கமல்ஹாசன் திரைக்கதை எழுத, அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்குவார் என்றும் கூறப்பட்டு; படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார் என்றதும் பலருக்கும் அந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட ஆர்வம் பிறந்தது.

படம் நிறுத்தம்?: ஆனால் அறிவிப்பு வந்ததோடு சரி; படத்தின் பணிகள் அடுத்தட்ட நகர்வுகளுக்கு செல்லவில்லை. இளையராஜாவுடன் பயணப்பட்டு அவருடைய அனுபவங்களை கேட்டறியும் வேலையில் அருண் மாதேஸ்வரன் இருப்பதாகவும் ஒரு தகவல் ஓடியது. இருப்பினும் படம் டேக் ஆஃப் ஆகவே இல்லை. இதன் காரணமாக இளையராஜா பயோபிக் கைவிடப்பட்டதோ என்ற கேள்விகளும் திரைத்துறையில் தொடர்ந்து ஓடிகொண்டிருந்தது.

Take a Poll

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு: இந்நிலையில் தனுஷின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி மறைந்த விஞ்ஞானியும் முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறில் நடிக்கிறார் தனுஷ். இதனை ஆதிபுருஷ் படத்தை இயக்கிய ஓம் ராவத் இயக்க; படத்துக்கு கலாம் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பு போஸ்டரும் வெளியாகியிருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒருபக்கம் மகிழ்ச்சியடைந்தாலும் அய்யய்யோ ஆதிபுருஷ் இயக்குநர் இந்தப் படத்தையும் தனுஷையும் என்ன செய்யப்போகிறாரோ என்றும்; இளையராஜாவின் பயோபிக் அவ்வளவுதானா என்று கவலையடைய ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X