தனுஷ் தெலுங்கில் நடிக்கும் வாத்தி... படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட்!

சென்னை : தனுஷ் தமிழ் படங்களைத்தாண்டி இந்திப்படத்திலும் நேரடியாக நடித்துள்ளார். அடுத்து தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்கிறார். வாத்தி எனப் பெயரிட்ட படத்திற்கான அப்டேட் வெளியிட்டுள்ளனர்.

அசுரன்,கர்ணன் ஆகிய மெகாஹிட் படங்களை தொடர்ந்து தனுஷ் இப்பொழுது மாறன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதுவரை தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த தனுஷ் நேரடி தெலுங்கு திரைப்படங்களிலும் இப்பொழுது அறிமுகமாக உள்ளார்

வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது

 சர்வதேச அளவில் கவனத்தை

சர்வதேச அளவில் கவனத்தை

இந்திய அளவில் அனைவரும் ஆச்சரியமாக பார்க்கும் மிகச் சிறந்த நடிகராக உள்ள நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் சர்வதேச அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து விருதுகளை குவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் மற்றும் கர்ணன் உள்ளிட்ட படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு பாராட்டு விருதுகளையும் அள்ளியது.

 திரில்லர் கதை களத்தில்

திரில்லர் கதை களத்தில்

இந்த நிலையில் தனுஷ் திரைப்படங்கள் மற்ற மொழி ரசிகர்களாலும் அதிக அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் கதை களத்தில் உருவாகி வருகிறது மேலும் இதில் தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

 தனுஷ் செல்வராகவன் கூட்டணியில்

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில்

புதுப்பேட்டை, மயக்கம் என்ன,காதல் கொண்டேன் என தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் வெளியான அத்தனை திரைப்படங்களும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது இந்த நிலையில் அடுத்ததாக நானே வருவேன் என்ற படத்தில் இந்த கூட்டணி இணைந்துள்ளது நானே வருவேன் முதல் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. அதை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டிலும் இந்த கூட்டணியில் இணைய உள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

 நேரடி தெலுங்கு படத்தில்

நேரடி தெலுங்கு படத்தில்

தற்போது நானே வருவேன், மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ் இதுவரை தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடித்து வந்தார். இந்த நிலையில் முதல்முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு வாத்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது.

Recommended Video

Galatta Kalyanam Movie Review | Atrangi Re Review in Tamil by Poster Pakiri | Dhanush |Akshay Kumar
 ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடக்கம்

ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடக்கம்

சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க படப்பிடிப்பு அடுத்த வாரம் ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கப்பட உள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது. மூன்றே மாதத்தில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X