தூள்பறக்கும் சண்டைக்காட்சிகள்... கேங் வார் படத்தில் நடிக்கும் தனுஷ்

சென்னை: நடிகர் தனுஷை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கப்போகும் கேங் வார் பற்றிய படத்தின் பெரும்பகுதி லண்டனில் எடுக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. அதோடு இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவும் நடிக்கப்போகிறார் என்று தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டாரை வைத்து பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இப்போது அவரது மாப்பிளையான தனுஷை வைத்து ஒரு படம் இயக்க போவதாக பேட்ட படத்தின் கொண்டாட்டத்திலேயே அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு இப்போது உறுதியாகி படத்திற்கான ப்ரீ-புரோடக்ஷன் வேலைகள் படு மும்மரமாக லண்டனில் நடைபெற்று வருகிறது.

Dhanush to star in Karthik Subburajs Gang War Film

சூப்பர் ஸ்டாரை இளமை காலத்து படங்கள் போல படு துள்ளலோடும் இளமையோடும் நம் கண்முன்னே நீண்ட இடைவெளிக்கு பிறகு கொண்டு வந்து நிறுத்தியது கார்த்திக் சுப்புராஜ். இப்படத்தின் பாடல்களும் படமும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசி தயாரிப்பில் தனுஷை இயக்க இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்திற்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஸ்டண்ட்டிற்கு அன்பறிவ் சகோதரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது படப்பிடிப்பிற்கான வேலைகள் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் தனுஷ், கார்த்திக் சுப்பராஜ், ஐஸ்வர்யா லட்சுமி, சசி உள்ளிட்ட படக்குழுவினர் லண்டனில் ஆஜராகியுள்ளார். அதோடு இப்படத்தில் புதிதாக ஹாலிவுட்டில் வெற்றி பெற்ற வெப் சீரிஸான கேம் ஆஃப் த்ரோன்ஸில் நைட் வாட்சில் லார்ட் கமாண்டராக நடித்த ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒப்பந்தமாகியுள்ளார்.

இது ஒரு கேங்ஸ்டர் பற்றின கதை. இரு வேறு ரவுடிஅணிகளுக்கு இடையே நடக்கும் மோதல் பற்றின கதை என்பதால் சண்டை காட்சிகள் தூள் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியை மாஸ் ஆக இயக்கியது போல் தனுஷையும் ஒரு மாஸ் ஹீரோ கெட்டப்பில் காட்சியமைப்பர் என்று எதிர்பார்க்கலாம்.

இது தனுஷின் 40வது படம் என்பதால் தனுஷின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கின்றனர். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு லண்டனில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே இப்படம் நம்மை லண்டனுக்கே அழைத்து செல்லப்போகிறது. ரஜினி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் வெற்றி கூட்டணி மருமகனுக்கும் ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X