Lal Salaam - தனுஷின் அந்த மனசு.. லால் சலாம் ட்ரெய்லர் பார்த்துட்டு அவர் போட்ட ட்வீட் என்ன தெரியுமா?

சென்னை: ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த், செந்தில் உள்ளிட்டோரை வைத்து லால் சலாம் படத்தை இயக்கியிருக்கிறார். படமானது பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் லால் சலாம் ட்ரெய்லரை பார்த்துவிட்டு தனுஷ் போட்டிருக்கும் ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். வசூல் ரீதியாக படம் அடி வாங்கினாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. முக்கியமாக முதல் பட இயக்குநர்போன்று ஐஸ்வர்யாவின் மேக்கிங் இல்லை. அனுபவப்பட்ட இயக்குநர் இயக்கியது போல் இருந்தது என்று ரசிகர்கள் பேசினார்கள். அதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படமும் தோல்வியையே சந்தித்தது.

 Dhanush Tweet About Rajinikanths Lal Salaam Movie Trailer

லால் சலாம்: இதற்கிடையே சில காரணங்களால் தனது கணவர் தனுஷை பிரிந்தார் ஐஸ்வர்யா. இந்த சூழலில் அவர் லால் சலாம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். கெஸ்ட் ரோல் என்றாலும் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் வரை அவர் படத்தில் இருப்பார் என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

இசை வெளியீட்டு விழா: படமானது பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டடிக்கும் என்று ஐஸ்வர்யாவும், ரஜினிகாந்த்தின் ரசிகர்களும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். நிலவரம் இப்படி இருக்க படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமாக நடந்தது. ரஜினிகாந்த், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

லால் சலாம் ட்ரெய்லர்: படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே இருக்கின்றன. இந்தச் சூழலில் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. ட்ரெய்லரை பார்க்கும்போது இந்தப் படம் கிரிக்கெட்டை மட்டும் மையப்படுத்தி இல்லாமல் இரண்டு ஊர்களுக்கு இடையே நடக்கும் பிரச்னையையும், மதம், சாதி பிரிவினைகள் பற்றி பேசியிருப்பது தெரிகிறது. மேலும் அந்தப் பிரச்னையை மொய்தீன் பாயாக நடித்திருக்கும் ரஜினிகாந்த் தீர்த்து வைப்பார் என்பதும் உறுதியாகியிருக்கிறது.

மாஸ் ரஜினிகாந்த்: முக்கியமாக ட்ரெய்லரில் ரஜினிகாந்த்துக்கு மாஸ் காட்சிகள் இருக்கின்றன. மூணாறு ரமேஷ் ஒரு இடத்தில், 'பம்பாய்ல பாய் ஆளே வேற டா' என்று சொல்வதை பார்த்த ரஜினி ரசிகர்கள், கண்டிப்பாக படத்தில் தலைவருக்கு மாஸ் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறிவருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானும் தன்னுடைய பங்குக்கு சிறந்த இசையை கொடுத்திருப்பதும் உறுதியாகியிருக்கிறது.

தனுஷ் ட்வீட்: லால் சலாம் படத்தின் ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். இந்நிலையில் லால் சலாம் ட்ரெய்லரை பார்த்த தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "லால் சலாம் ட்ரெய்லர்.. டீமுக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்' என ட்ரெய்லரை பகிர்ந்து கூறியிருக்கிறார். தனுஷும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால் தற்போது அவர்கள் இரண்டு பேரும் தனித்தனியாக வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடப்த்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X