தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியை வச்சு.. அனுராக் காஷ்யபுக்கு வந்த ஆசையப் பாருங்க!
இமைக்கா நொடிகள் படத்தின் வில்லன் அனுராக் காஷ்யப்விற்கு, தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியை இணைத்து ஒரு படம் பண்ண வேண்டுமென்று ஆசையாம்.
சென்னை: இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் வில்லனாகத் தமிழ் திரைப்படத்திற்கு அறிமுகமான பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்விற்கு தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியை இணைத்து ஒரு படம் பண்ண வேண்டுமென்று ஆசையாம்.
இந்த வாரம் திரைக்குவந்த நயன்தாரா மற்றும் அதர்வா நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்தின் வில்லன் அனுராக் காஷ்யப் ஒரு பாலிவுட் இயக்குநர். அவர் இமைக்கா நொடிகள் படத்தில் தனது நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

இந்தப் படத்தில் வில்லனாகத் தனது நடிப்பை கதாப்பாத்திரத்திற்கு தகுந்த அளவிற்குக் கொடுத்து சிறந்த நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். இதனால் இவர் பல தமிழ்ப் படங்களில் வில்லனாக வலம் வருவார் என்று அனைவரும் கூறுகின்றனர்.
இந்தப் படத்திற்காக சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில், தனக்குத் தமிழ் படம் ஒன்று இயக்கவேண்டும் என்றும் அதிலும் நடிகர் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியை இணைத்து அந்தப் படத்தை உருவாக்கவேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என்று கூறினார்.
அந்தப் படத்திற்காக இருவருக்கும் தகுந்தது போல கதாப்பாத்திரம் கொண்ட ஒரு கதையை உருவாக்கிக் கொண்டிருப்பதாகவும் விரைவில் அவர்கள் சம்மதித்தால் படத்தின் அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் கூறினார்.
உங்களுக்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் அந்த ஆசை இருக்கிறது.


Click it and Unblock the Notifications











