சர்ச்சையெல்லாம் இத்தோட போக வேண்டும்.. திருப்பதியில் மனமுருகி வேண்டிய தனுஷ்.. மகன்களுடன் சாமி தரிசனம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் தனுஷ், தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் சாமி தரிசனம் செய்தார். அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த தரிசனம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மிகவும் எளிமையான மகன்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஏழுமலையானை தரிசித்த தனுஷின் தோற்றம், பலரையும் நெகிழ வைத்துள்ளது.
தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல முகங்களை கொண்டவராக இருக்கிறார். தற்போது தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அவரது நடிப்பு திறமைக்கு ரசிகர்களிடையே எப்போதும் குறைவே இல்லை.

நடிகர் தனுஷ்: தற்போது தனுஷ், போர் தொழில் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த, விக்னேஷ் ராஜா இயக்கத்தில் 'கர' என்ற படத்தில் நடித்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் வெளியானது. அதனுடன் ஒரு கிலிம்ப்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டது. அந்த டைட்டில் கிலிம்ப்ஸ் வீடியோவை பார்க்கும்போது இப்படம் ஒரு அழுத்தமான திரில்லர் திரைப்படமாக இருக்கும் என படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும், கே.எஸ்.ரவிக்குமார், சூரஜ் வெஞ்சாரமூடு, கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டிராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தபடத்தை தொடர்ந்து 'அமரன்' பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இப்படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது.
திருப்பதியில் சாமி தரிசனம்: இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனுஷ் தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்துள்ளார். தனது பரபரப்பான சினிமா பணிகளுக்கு இடையே ஆன்மீக நிம்மதிக்காக திருப்பதிக்கு அடிக்கடி வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். இந்த முறையும் தனது மகன்களுடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்திருப்பது, குடும்பத்துடன் நேரம் செலவிடும் அவரது பண்பை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











