ராயன் பட ரிலீஸ்.. திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த தனுஷ்

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. முக்கியமாக போட்டிக்கு களமிறங்கிய அயலானைவிட கேப்டன் மில்லர் வசூலில் கொஞ்சம் டல்லடித்ததாகவே கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க தனுஷ் இப்போது ராயன் படத்தை இயக்கி நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் அந்தப் படமானது ஜூலை 26ஆம் தேதி வெளியானது. படத்துக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது.

கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடைசியாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்த அந்தப் படம் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. எனவே கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இருந்த தனுஷ்; தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார். படத்துக்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

Raayan Dhanush Tamil Cinema

நட்சத்திர கூட்டம்: இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். தனுஷுடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா, துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன் என ஏகப்பட்ட பேர் களமிறங்கியிருந்தார்கள்.

இயக்குநர் தனுஷ்: அதேபோல் தனுஷ் முதலில் இயக்கிய பவர்பாண்டி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. எனவே ராயன் படத்திலும் இயக்குநராக தனுஷ் தனது முத்திரையை பதிப்பார் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். படமானது கடந்த 26ஆம் தேதி வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் படத்துக்கு தங்களது கலவையான விமர்சனங்களையே கொடுத்திருக்கின்றனர்.

படத்தில் என்ன மிஸ்டேக்: தங்கை மீது அண்ணன் வைத்திருக்கும் பாசத்தையும், தங்கைக்காக பழி வாங்குவதையும் அடிப்படையாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் தனுஷ். இது பல படங்களில் வந்த கதைதான் என்றாலும்; ஸ்க்ரீன் ப்ளே ஒழுங்காக இருந்திருந்தால் படத்தின் லெவல் இன்னும் உயர்ந்திருக்கும் என்று ஓபனாக ரசிகர்கள் கூறினர்.

கோயிலில் தரிசனம்: இப்படி ராயன் படத்துக்கு சுமாரான வரவேற்பு கிடைத்திருப்பதால்; எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லையே என்று தனுஷ் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை கோயிலில் தனுஷ் தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ராயன் படத்தின் ரிசல்ட் அப்படி இப்படி வந்திருப்பதால்தான் சாமி தரிசனம் செய்தாரா தனுஷ் என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X