தெலுங்கு படத்தில் நடிக்க கதை கேட்கும் தனுஷ்

By Mayura Akilan

திருப்பதி: தமிழ், இந்தி திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் நேரடி தமிழ்படங்களில் நடிக்க உள்ளாராம். இதற்காக கதை கேட்டு வருகிறார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா, இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோருடன் நேற்று காலை வி.ஜ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார்.

பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,திருப்பதி வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது என்றார்.

2015ல் ஷமிதாப் ரிலீஸ்

2015ல் ஷமிதாப் ரிலீஸ்

இந்தியில் அமிதாப்பச்சனுடன் சேர்ந்து நடித்ததை எனது வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். அவரும் நானும் இணைந்து நடித்த ‘ஷமிதாப்' படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

நேரடி தெலுங்கு படத்தில்

நேரடி தெலுங்கு படத்தில்

தமிழில் 3 படங்களில் நடித்து வருகிறேன். தெலுங்கு படத்தில் நடிக்க நல்ல கதையை தேடி வருகிறேன். அப்படி கிடைத்தால் தெலுங்கு படத்தில் நேரடியாக நடிப்பேன். இவ்வாறு தனுஷ் கூறினார்.

பக்தர்கள் கூட்டம்

பக்தர்கள் கூட்டம்

திருப்பதியில் ஞாயிறன்று விடுமுறை தினம் என்பதால்நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை 48,341 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

20 மணிநேர காத்திருப்பு

20 மணிநேர காத்திருப்பு

அதன் பின்பும் வைகுண்டம் கியூ காம்ளக்சில் 27 கம்பார்ட்மெண்டில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தர்ம தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆனது.

நீண்ட வரிசையில் பக்தர்கள்

நீண்ட வரிசையில் பக்தர்கள்

கால்நடையாக வந்த பக்தர்கள் 7 மணி நேரம் தரிசனத்துக்கு காத்து நின்றனர். தலைமுடி காணிக்கை, தங்கும் அறைக்காக பக்தர்கள் 2 மணி நேரம் வரிசையில் காத்து நின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X