சிம்பு vs தனுஷ் மோதலா?.. அல்லது சிவகார்த்திகேயன் vs தனுஷ் போட்டியா?.. அப்போ உண்மையாவே டான் 2 தானா?

சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் படத்தில் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ள நிலையில், படத்தில் கேமியோவாக அவர் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் தனுஷ் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறுகின்றனர். இந்த வாரம் கோலிவுட்டில் தனுஷ் மற்றும் சிம்பு மோதப் போகிறார்களா என பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது தனுஷ் vs சிவகார்த்திகேயன் மோதல் என்கிற பேச்சுக்களும் அடிபடத் தொடங்கியிருக்கிறது.

ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கே.எஸ். ரவிக்குமார், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள டிராகன் திரைப்படம் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகிறது.

Dragon NEEK Sivakarthikeyan

தனுஷ் இயக்கத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் நடித்த நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் நாளை வெளியாகவுள்ள நிலையில், டிக்கெட் புக்கிங்கில் டிராகன் படம் தனுஷ் படத்தை முந்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிராகன் படத்தில் சிம்பு பாடல்: "ஏன்டி விட்டுப்போன" என்கிற பாடலை பிரதீப் ரங்கநாதனுக்காக சிம்பு பாடி கொடுத்துள்ளார். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் சிம்பு காட் ஆஃப் லவ் படத்தில் நடிக்க உள்ள நிலையில், அந்த நட்பின் காரணமாக இப்படியொரு புரமோஷனை டிராகன் படத்துக்கு செய்துள்ளார். ஹரிஷ் கல்யாண் நடித்து வரும் டீசல் படத்துக்கும் சிம்பு பாடிக் கொடுத்துள்ளார். தொடர்ந்து பல இளம் நடிகர்களுக்கு சிம்பு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

Dragon NEEK Sivakarthikeyan

சிம்புவா? சிவகார்த்திகேயனா?: டிராகன் படத்தில் சிறப்பான கேமியோ ஒன்று இருப்பதாக அஸ்வத் மாரிமுத்து பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஏற்கனவே டிரைலரில் அவே கேமியோவாக நடித்திருந்தார். சிம்பு இந்த படத்துக்கு பாடியுள்ள நிலையில், அவர்தான் கேமியோ என பலரும் நினைத்து வந்தனர். ஆனால், லேட்டஸ்ட் தகவலின் படி சிவகார்த்திகேயனின் கேமியோ இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.

Dragon NEEK Sivakarthikeyan

டான் சிவகார்த்திகேயன்: ஓ மை கடவுளே படத்தில் விஜய் சேதுபதி கடவுளாக நடித்திருந்த நிலையில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள டிராகன் படத்தில் டான் சிவகார்த்திகேயன் என்ட்ரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகத்தான் டான் 2 என பிரதீப் ரங்கநாதன் மொட்டை மாடி பார்ட்டியில் அழுத்தி அழுத்தி சொன்னாரா என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி டீகோட் செய்து வருகின்றனர்.

Dragon NEEK Sivakarthikeyan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X