சிவகார்த்திகேயன் பட நாயகிகளை போட்டிக்கு கமிட் செய்தாரா தனுஷ்?.. இது என்னங்க புது பஞ்சாயத்து?
சென்னை: தனுஷ் இப்போது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடிப்பதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டார். இசையமைப்பாளராக சாய் அபயங்கர் கமிட்டாகியிருக்கிறார். மேலும் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோரும் நடிக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க ஹீரோயின்கள் விஷயத்தில் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தனுஷ் மூவ் செய்ததாக கூறப்படுகிறது.
தனுஷின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான தேரே இஷ்க் மெய்ன், இட்லி கடை, குபேரா ஆகிய மூன்று படங்களுமே பெரிய அளவுக்கு வெற்றியை பெறவில்லை. தனுஷின் நடிப்புக்கு வழக்கம்போல் பாராட்டு கிடைத்தது. இருந்தாலும் வணிக ரீதியாக வெற்றியைத்தான் அவர் பெரிதாக எதிர்பார்த்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கண்டிப்பாக படம் பந்தயம் அடிக்கும் என நம்பப்படுகிறது.

ராஜ்குமார் பெரியசாமியுடன்: இப்படத்துக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிப்பதற்கான வேலைகளை தொடங்கிவிட்டதாக தெரிகிறது. எப்படியாவது விமர்சன ரீதியான வரவேற்பையும் விட்டுவிடாமல்; வணிக ரீதியான ஒரு வெற்றியை பெற வேண்டும் என மும்முரமாக உழைத்துக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்திலும் நடிக்கிறார். அவரது லைன் அப் ஹெவியாகவே இருபப்தால் ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதியடைந்திருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனுடன் மனஸ்தாபம்?: இதற்கிடையே டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு கரியரின் ஆரம்பத்தில் நிறைய நம்பிக்கை வைத்து உதவி செய்தது அனைவருக்குமே தெரியும். எஸ்கே வளர்ந்து வந்த சமயத்தில் இரண்டு பேரும் உடன் பிறவா சகோதரர்கள் மாதிரிதான் பல நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக வந்திருக்கிறார்கள். காலம் மாறுகையில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தனுஷைவிடவும் அதிக உயரம் சென்றுவிட்டது.
வரிசையாக நூறு கோடிகள்: டாக்டர், டான், பராசக்தி என வரிசையாக அவரது படங்கள் நூறு கோடி ரூபாய் வசூலிக்கின்றன. அயலான் படம் கூட கேப்டன் மில்லர் படத்தை வசூலில் முந்தியது நினைவுகூரத்தக்கது. இது ஒருபக்கம் இருக்க தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மோதல் வந்துவிட்டதாக நீண்ட நாட்களாக பேசப்படுகிறது. இட்லி கடை ஆடியோ லான்ச்சில்கூட தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் பேசிய பேச்சில் எஸ்கே மீதான தாக்குதல் இருந்ததாக கருதப்பட்டது.
தனுஷுடன் நடிக்கும் நாயகிகள்: சூழல் இப்படி இருக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிக்க கமிட்டாகியிருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேருமே சிவகார்த்திகேயனுடன் அமரன், பராசக்தி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்கள். தற்போது சிவகார்த்திகேயன் மட்டும்தான் அவர்களுடன் நடிப்பாரா நானும் நடிப்பேன் என போட்டிக்கு அவர்களை கமிட் செய்திருப்பதாக ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. இது குறித்து ப்ளூ சட்டை மாறனும் தனது எக்ஸ் பக்கத்தில், "அமரன் பட இயக்குனர் மற்றும் நாயகியை on board இல் ஏற்றிய தனுஷ். தமிழ் சினிமாவின் அடுத்த விஜய் - அஜித் சகாப்தம்... திடீர் தளபதி vs சுள்ளான்தான் என ரசிகர்கள் ஆர்வாரம்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











