பராசக்தி படத்தில் நடிக்க ஆசைப்பட்ட தனுஷ்?.. சிவகார்த்திகேயன் பிளான் செஞ்சு தூக்கிட்டாரா?.. பிரபலம் ஓபன்

சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. நிச்சயம் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் படமாக இது இருக்கும் என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. சூழல் இப்படி இருக்க இப்படத்தில் தனுஷ் நடிக்க ஆசைப்பட்டதாக பிரபல பத்திரிகையாளர் அந்தணன் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் படிப்படியாக வளர்ந்து இப்போது கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களுக்குள் ஒருவராக வந்துவிட்டார். முக்கியமாக அவர் நடித்த அமரன் படம் அவரது மார்க்கெட்டை எங்கேயோ கொண்டு சென்று நிறுத்திவிட்டது. உலகம் முழுவதும் 300 கோடி ரூபாயை வசூலித்து எஸ்கேவின் கமர்ஷியல் வேல்யூவை அதிகரித்துவிட்டது. இதனால் அவரும் அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அந்த வெற்றி கொடுத்த விஷயங்களை தக்கவைத்துக்கொள்ள எஸ்கே கடுமையாக உழைத்துவருகிறார்.

சுதா கொங்கராவின் பராசக்தி: அவர் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்திருக்கிறார். ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மாணவர்களின் போராட்டத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்தும் என்ற பேச்சுக்கள் இப்போதே எழுந்திருக்கின்றன. படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

Dhanush Want to Act in Sivakarthikeyan s Parasakthi Journalist Anthanan Drops Big Reveal
Photo Credit:

தனுஷ் Vs சிவகார்த்திகேயன்: பராசக்தியை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இப்படி படு பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் சிவாவை சுற்றி ஒரு பேச்சு மட்டும் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது அவருக்கும் தனுஷுக்கும் மோதல் என்பதுதான் அது. தனுஷ்தான் சிவகார்த்திகேயனை சினிமாவுக்குள் கொண்டு வந்தார். ஆனால் காலப்போக்கில் அவர்களுக்குள் முட்டிக்கொண்டதாக குரல்கள் கேட்டன.

உண்மையில் மோதல்தானா?: அதெல்லாம் இருக்காது என்றுதான் ரசிகர்கள் முதலில் பேசினார்கள். ஆனால் கொட்டுக்காளி பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், 'நான் வாய்ப்பு கொடுத்துவிட்டு நான்தான் வளர்த்துவிட்டேன் என்று எப்போதும் சொல்லமாட்டேன்' என சிவா பேசியதை பார்த்த பலரும், மறைமுகமாக தனுஷைத்தான் தாக்குகிறார் என்று கூறினார்கள். மேலும் கேப்டன் மில்லர் படத்துக்கு போட்டியாக அயலான் படமும் வந்ததை வைத்து கண்டிப்பாக இரண்டு பேருக்கும் மோதல்தான் என்று உறுதியாக சொல்ல ஆரம்பித்தார்கள் ரசிகர்கள்.

அந்தணன் பேச்சு: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "சுதா கொங்கராவின் பராசக்தி படத்தின் கதையை தனுஷ் படித்தார். படித்துவிட்டு, இந்தப் படத்தில் நான் நடிக்கிறேன் மேடம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள். எனக்கு கொஞ்சம் படங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று எவ்வளவோ சொன்னாராம். ஆனால் அது நடக்கவில்லை. அதேசமயம் பராசக்தி படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்து சுதா வீட்டு வாசலில் சென்று நின்று, அமர்ந்து இந்தப் படத்துக்குள் சிவகார்த்திகேயன் வந்துவிட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X