»   »  'இளைய சூப்பர் ஸ்டார்' ஆக விரும்பும் தனுஷ்?

'இளைய சூப்பர் ஸ்டார்' ஆக விரும்பும் தனுஷ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் ஆகும் ஆசை வந்துவிட்டதோ என்று பேசப்படுகிறது.

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு அடிக்கடி கிளம்புவதும் அடங்குவதும் வழக்கமானது தான். எங்கள் அண்ணா விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று இளைய தளபதி ரசிகர்களும், எங்கள் தல தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அஜீத் ரசிகர்களும் அவ்வப்போது கூறுவது உண்டு. நான் இந்த சூப்பர் ஸ்டார் ஆட்டத்திற்கே வரவில்லை என்று ஓரமாக ஒதுங்கி இருப்பவர் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூப்பர் ஸ்டார் போட்டி இப்போதைக்கு ஓயவே ஓயாது.

ரஜினி

ரஜினி

எப்பொழுதும் ஒரே சூப்பர் ஸ்டார் தான். அது எங்கள் தலைவர் தான் என்று ரஜினி ரசிகர்கள் உரத்த குரலில் தெரிவித்து விஜய், அஜீத் ரசிகர்களை ஆஃப் செய்வார்கள்.

இளைய சூப்பர் ஸ்டார்

இளைய சூப்பர் ஸ்டார்

சத்தம் இல்லாமல் இளைய சூப்பர் ஸ்டார் தோன்றியிருக்கிறார். தனுஷ் ரசிகர் ஒருவர் தான் அவரை இளைய சூப்பர் ஸ்டார் என்று ட்வீட் செய்துள்ளார்.

தனுஷ்

தனுஷ்

இளைய சூப்பர் ஸ்டார் என்று ரசிகர் செய்த ட்வீட்டை தனுஷ் ரீட்வீட் செய்துள்ளார். அப்படி என்றால் அவருக்கு சூப்பர் ஸ்டார் ஆசை உள்ளது என்று கூறப்படுகிறது.

சொல்லாமல் சொல்கிறாரா?

சொல்லாமல் சொல்கிறாரா?

தன்னை இளைய சூப்பர் ஸ்டார் என்று அழைக்குமாறு ரசிகர்களுக்கு மறைமுகமாக சொல்லத் தான் தனுஷ் அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார் என்று பேசப்படுகிறது.

லிட்டில் சூப்பர் ஸ்டார்

லிட்டில் சூப்பர் ஸ்டார்

சிம்பு தன்னை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று கூறியதோடு படங்களிலும் அந்த பட்டத்தை பயன்படுத்தி வந்தார். பின்னர் தனத்கு லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டமே வேண்டாம் என்று அவர் தெரிவித்தார். மேலும் தனக்கு சூப்பர் ஸ்டார் ஆகும் ஆசை இல்லை என சிம்பு அண்மையில் தெரிவித்துள்ளார்.

இது வேறயா?

இது வேறயா?

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து அஜீத், விஜய் ரசிகர்கள் சண்டை போடுகின்றனர். இந்நிலையில் தனுஷ் ரசிகர் இளைய சூப்பர் ஸ்டார் என்று புதிய பட்டத்தை தெரிவித்து எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றிவிட்டார்.

English summary
Dhanush is reportedly like to be called Ilaya Superstar.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil