ரஜினியை வைத்து டைரக்ட் பண்ணனும்.. 'மாப்பிள்ளை'யின் ஆசை
ரஜினியை வைத்து அத்தனை பேருக்குமே ஏதாவது ஒரு ஆசை இருக்கத்தான் செய்கிறது. மல்லிகா ஷெராவத் தீவுக்கு ரஜினியுடன் போக ஆசைப்படுகிறார்.. ரஜினியின் மாப்பிள்ளை தனுஷோ.. மாமனாரை வைத்து டைரக்ட் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
ஆடுகளம் படத்தில் தேசிய விருது பெற்றதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் தனுஷ். கொலவெறி பாடல் அவரின் புகழை மேலும் உயர்த்தியது.
இப்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷுக்கு இயக்குநராகும் ஆசையும் இருக்கிறதாம்.

நடிகராக தேசியவிருது
துள்ளுவதோ இளமையில் அறிமுகமான தனுஷ் ஆடுகளம் படத்தில் தேசிய விருது பெற்றதன் மூலம் இளம் வயதில் தேசிய விருது பெற்ற இளைஞன் என்ற பெருமையை பெற்றார்.

தனுசின் பல முகங்கள்
தனுஷுக்கு பல முகம்.. நடிக்கிறார், டான்ஸ் ஆடுகிறார், பாடுகிறார், தயாரிப்பாளராக கலக்குகிறார்.

இயக்குநராக ஆசை
தனுஷ் விரைவில் இயக்குநராக ஆசைப்படுகிறார். தான் இயக்குனரானால் ரஜினி, சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோரை வைத்து இயக்குவேன் என்கிறார்.

நண்பர்கள்டா...
தனுஷின் நெருங்கிய நண்பர்களாக இப்போது இருப்பவர்கள் சிவகார்த்திகேயனும், அனிருத்தும்தான். இதில் சிவகார்த்திகேயன் தனுஷுடன் நடித்தவர். தனுஷின் தயாரிப்பிலும் நடித்து நல்ல வசூலைக் கொடுத்தார். அனிருத் பற்றிச் சொல்ல வேண்டாம்.

ரஜினியை தனுஷ் இயக்கினா.. ஐஸ்வர்யாவுக்கு என்ன வேலை தருவார்...
ஒருவேளை ரஜினியை தனுஷ் இயக்குவதாக இருந்தால், ரஜினியின் மகளும், தனது மனைவியுமான ஐஸ்வர்யாவுக்கு என்ன வேலை தருவார்.. வேற என்ன தயாரிப்பாகத்தான் இருக்க முடியும்.
சூப்பரப்பு....


Click it and Unblock the Notifications











