காக்கா முட்டை படத்துக்கு ஓட்டு கேட்ட தனுஷ்

By Mayura Akilan

டொராண்டா சர்வதேச திரைப்பட விழா கனடா நாட்டின் டொராண்டோ நகரில் நடைபெற்று வருகிறது.இந்த விழாவில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 300 படங்கள் திரையிடப்படுகிறது. இந்த விழாவில் தமிழ்ப்படம் ஒன்றும் திரையிடப்படுகிறது.

டைரக்டர் மணிகண்டன் இயக்கிய குறும்படமான காக்கா முட்டை என்ற படமும் திரையிடப்படுகிறது. இந்தப்படம் வருகிற செப்டம்பர் 13 ந்தேதி சனிக்கிழமை திரையிடப்படுகிறது.

Dhanush wants votes for what?

காக்கா முட்டை படத்தை தனுஷின் ஒண்டர் பார் நிறுவனமும், டைரக்டர் வெற்றி மாறனின் க்ராஸ் நோட் நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ளது. வெற்றிமாறனின் உதவியாளர் மணிகண்டன் இயக்கி உள்ளார்.இந்தப்படம் கனடா நாட்டின் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுவர்களின் கதை

சென்னையின் குடிசை பகுதியில் வாழும் இரண்டு சிறுவர்கள் தங்கள் பகுதியில் புதிதாக திறக்கப்படும் ஒரு பீட்சா கடையில் பீட்சா சாப்பிட நினைக்கிறார்கள். அதற்கு அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதான் படத்தின் கதை.

ரசிகர்களைக் கவரும்

கடந்த 6 வருடங்களுக்கு முன் டொராண்டோ படவிழாவில் திரையிடப்பட்ட சிலம் டேக் மில்லினர் படம் உலக ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. அது பல ஆஸ்கார் விருதுகளை பெற்றது. அது போல் காக்க முட்டை தமிழ் படமும் உலக ரசிகர்களின் கவனத்தை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் நிலை

படம் குறித்து இயக்குனர் மணிகண்டன் கூறும் போது நான் சேரி வாழ்க்கையை எதார்த்தமாக் சித்தரிக்க விரும்பினேன். உலகில் இந்தியா வறுமையான நாடு என விளம்பர செய்யவிரும்பவில்லை என கூறினார்.

ஓட்டு கேட்ட தனுஷ்

இதனிடையே இந்தப் படம் பார்த்துவிட்டு வாக்களியுங்கள் என்று படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் காக்கா முட்டை படத்திற்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

டொராண்டோ விழாவில்

டொராண்டோ படவிழாவில் இதற்கு முன் மணிரத்னம் இயக்கிய இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், சுசீந்திரன் இயக்கிய அழகர்சாமியின் குதிரை ஆகிய படங்கள் திரையிடபட்டு உள்ளது என்பது குறிப்பிட தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X