twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தனுஷ்: ஒரு நாயகன் உருவான கதை…

    By Mayura Akilan
    |

    வெங்கடேஷ் பிரபுவாக சாதாரணமாக இருந்த ஒருவர் தனுஷ் என்று தனது பெயரை மாற்றிய உடன் இன்றைக்கு இந்திய அளவில் வெற்றிகரமான நாயகனாக உருவாகியிருக்கிறார்.

    தேசிய விருது பெற போராடி வரும் இன்றைய கால கட்டத்தில் ஆடுகளம் படத்தின் மூலம் இளம் வயதில் தேசிய விருது பெற்று சிறந்த நடிகர் என்று நிரூபித்துள்ளார்.

    சினிமாவில் நடிக்கவந்து12 ஆண்டுகளில் ஒரு நடிகராக மட்டுமல்ல, பாடகராக. பாடலாசிரியராக, படத்தயாரிப்பாளராக பல முகங்களை கொண்டவராக திகழ்கிறார் தனுஷ். அவருடைய 30 வது பிறந்தநாளில் சில தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்களேன்.

    பள்ளி பருவத்திலேயே

    பள்ளி பருவத்திலேயே

    2001ம் ஆண்டு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அண்ணன் செல்வராகவனால் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் செய்யப்பட்டவர் தனுஷ். அந்த படம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. அதன்பின்னர் காதல் கொண்டேன் படத்தின் மூலம் தனக்கு நடிக்க வரும் என்பதை நிரூபித்தவர்.

    மன்மதராசா ஹிட்

    மன்மதராசா ஹிட்

    நடிக்க மட்டுமல்ல சூப்பராக நடனமாடவும் தெரியும் என்பதை திருடா திருடி படத்தின் மூலம் நிரூபித்தவர். பட்டி தொட்டியெங்கும் மன்மதராசா புகழ் பரவியது.

    தேசிய விருது

    தேசிய விருது

    இளம் வயதில் தேசிய விருது பெற்றவர் என்ற பெருமை தனுஷ்க்கு மட்டுமே உண்டு. ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்றபோது அவருக்கு 25 வயது கூட நிறைவடையவில்லை.

    கொலைவெறி புகழ்

    கொலைவெறி புகழ்

    2011ல் கொலை வெறி ஜூரம் நாடுமுழுவதும் பரவியது. பிரதமர் மன்மோகன் சிங் விருந்துக்கு அழைக்கும் அளவிற்கு புகழை பெற்றுத் தந்தது. இந்த பாடல் யுடியூப்பில் ரிலீஸ் ஆகி 67 மில்லியன் பேர் இதனை கண்டு ரசித்தனர்.

    தேசிய அளவில் வெளிச்சம்

    தேசிய அளவில் வெளிச்சம்

    தேசிய விருது புகழ் அதோடு கொலைவெறி சூப்பர் ஹிட் இதெல்லாம் சேர்த்து வடமாநில இளசுகளிடையே தனுஷ் புகழை பரவச் செய்தது. இதுதான் ராஞ்ச்சனா பட இயக்குநர் ஆனந்த் எல்.ராய்க்கு தனது படத்தில் தனுஷை அறிமுகம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

    வடமாநிலங்களில் ஹிட்

    வடமாநிலங்களில் ஹிட்

    தென்னக நடிகர்கள் இந்தியில் நடித்திருந்தாலும் ஒரே படத்தில் அதுவும் அறிமுகப் படத்திலேயே தனுஷ்க்கு கிடைத்த புகழ் வேறு எந்த நடிகருக்கும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. முதல் படமே 100 கோடி வசூலித்து விட்டது. ஆனாலும் அதை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் அடுத்த படத்திற்கு ஆர்வமுடன் தயாராகிவிட்டார் தனுஷ்.

    வெற்றி நாயகன்

    வெற்றி நாயகன்

    மரியான் படத்திலும் வெற்றிகரமான நடிகராக நிரூபித்துவிட்டார். இதுவும் ஒரு மாறுபட்ட களம், அடுத்ததாக நையாண்டியில் மாறுபட்ட வேடம் என தனது களத்தை புதிது புதிதாக மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார்.

    25 படங்கள் ஹீரோ

    25 படங்கள் ஹீரோ

    துள்ளுவதோ இளமை தொடங்கி நையாண்டி வரை 30 வயதில் 25 படங்கள் ஹீரோவாக நடித்திருக்கிறார் தனுஷ். ( 2001 முதல் 2013 வரை) இவை தவிர 4 படங்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

    பாடலாசிரியர் தனுஷ்

    பாடலாசிரியர் தனுஷ்

    நடிகர் மட்டும் அல்ல பாடலும் எழுத வரும் என்று நிரூபித்துள்ளார் தனுஷ். "ஒய் திஸ் கொல வெறி" உலகம் முழுவதும் ஹிட் ஆனது.

    மயக்கம் என்ன, 3, எதிர்நீச்சல்,மரியான் படங்களில் பாடல் எழுதியுள்ளார்.

    பாடகர் தனுஷ்

    பாடகர் தனுஷ்

    2004ம் ஆண்டு புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தில் நாட்டுசரக்கு பாடலை பாடினார். தேவதையைக் கண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்,மயக்கம் என்ன, 3, எதிர்நீச்சல் படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

    காதல் மனைவி, 2 குழந்தைகள்

    காதல் மனைவி, 2 குழந்தைகள்

    2003ல் காதல் கொண்டேன் படம் பிரிவியூ பார்க்க வந்த போது ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் ஏற்பட்ட நட்பு காதலாகி பின்னர் திருமணத்தில் முடிந்தது. யாத்ரா, லிங்கா என்ற இரண்டு குழந்தைகள் தனுஷ்க்கு இருந்தாலும் இன்னமும் பள்ளிக்கு செல்லும் மாணவனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு தனது மனைவி, மகன்களுடன் 30 நாட்கள் மட்டுமே செலவிட முடிந்தது என்கிறார் ஏக்கத்துடன். அதனால்தான் இந்த பிறந்தநாளை குடும்பத்தாருடன் லண்டனில் கொண்டாட பறந்துவிட்டார்.

    படத்தயாரிப்பாளர் தனுஷ்

    படத்தயாரிப்பாளர் தனுஷ்

    தன்னைப் போல எளிமையான தோற்றம் கொண்டவர்களும் சினிமாவில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே படத்தயாரிப்பாளராக மாறியுள்ளார் தனுஷ். 3 படத்தில் மனைவி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் நடித்து சிறந்த நடிகர் விருது பெற்றுள்ளார். நண்பர் சிவகார்த்திக்கேயனை வைத்து எதிர்நீச்சல் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிநார். , காக்கா முட்டை படங்களின் தயாரிப்பாளர். ஒரு நாயகன் உருவாக்கப்படலாம். ஆனால் தனக்கான களத்தை சரியாக தேர்ந்தெடுத்து வெற்றி பெறுவது என்பது எல்லோராலும் முடியாது.

    English summary
    Dhanush has achieved something that has eluded the most famous of south Indian actors, including his iconic father-in-law Rajinikanth: He's cracked Bollywood.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X