தனுஷ் பெண் ரசிகைகளை இழந்து விடுவார் ஜாக்கிரதை ... எச்சரிக்கும் பிரபலம்!
சென்னை: நடிகர் தனுஷ் இப்பொழுது ஹாலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து தெலுங்கிலும் நேரடியாக அறிமுகமாகிறார்.
தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் தி கிரே மேன் என்ற படத்தில் தனுஷ் நடித்து வருவது தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளது
இந்த நிலையில் தனுஷ் பெண் ரசிகைகளை இழந்து விடுவார் என பிரபலம் ஒருவர் காட்டமாக பேசியுள்ளார்.

தேசிய விருது
தோல்விகளால் துவண்டு இப்பொழுது வெற்றிகளை குவித்து வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சொல்லி வைத்ததுபோல வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்துள்ளது. அதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படமும் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து வெளியான ஜகமே தந்திரம் மற்றும் சமீபத்தில் வெளியான மாறன் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

முதல் முறையாக பத்திரிக்கையாளராக
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் முதல் முறையாக பத்திரிக்கையாளராக நடித்த மாறன் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து திரில்லர் கதை களத்தில் வெளியான மாறன் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை. ரொம்பவும் சாதாரண கதையை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தது ரசிகர்களை மிகவும் அப்செட் செய்தது.

ரசிகர்களை அப்டேட் செய்துள்ளது
தனது ஒவ்வொரு படங்களிலும் சிறந்த நடிகர் என நிரூபித்து வரும் தனுஷுக்கு இந்திய அளவில் ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. ஆனால் இவரின் விவாகரத்து விவகாரம் ரசிகர்களை மிகவும் அப்டேட் செய்துள்ளது.

இருவரும் பிரிவதாக
அந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 18 ஆண்டுகளாக சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிவதாக சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து பதிவிட்டு இருந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பேச்சுவார்த்தையில் கஸ்தூரி ராஜா
இது உண்மையாக இருக்கக் கூடாது அப்படியே இருந்தாலும் அனைவரும் பேசி இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என கேட்டு வருகின்றனர். ஆனால் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து முடிவில் தீர்மானமாக இருப்பதாக தெரிகிறது. இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் கஸ்தூரி ராஜா இருப்பதாகவும் விரைவில் நற்செய்தி வரும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Recommended Video

பெண் ரசிகைகளை இழந்து விடுவார்
இந்த நிலையில் பிரபல எழுத்தாளரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் தனுஷ் ஒரு மிகச்சிறந்த நடிகர் தந்தையாக, மகனாக, மிகச் சிறந்த நடிகராக உள்ள இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பாக அசுரன் படத்திற்கு பிறகு தனுஷுக்கு இந்திய அளவில் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தனுஷின் விவகாரத்தால் தனுஷ் பெண் ரசிகைகளை இழந்து விடுவார் எனவே ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ்வதுதான் தனுஷுக்கு நல்லது என எச்சரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











