அட செம காம்போவா இருக்கே.. போர் தொழில் இயக்குநருடன் இணைகிறாரா தனுஷ்?

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் அவர் எதிர்பார்த்த ரிசல்ட்டை அவருக்கு கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியிருக்கும் அவர் அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துவருகிறார். ராயன் படம் அடுத்த மாதம் வெளியாகவிருக்கிறது. மேலும் இளையராஜாவின் பயோபிக்கிலும் நடிக்கிறார் தனுஷ். இந்தச் சூழலில் தனுஷின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷ் பல விமர்சனங்களை கடந்து இன்று மிகச்சிறந்த நடிகர் என்ற இடத்தில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் இவர் எல்லாம் நிலைக்கவே மாட்டார் என்று பலரும் கூறினர். ஆனால் அவர்களின் கணிப்பை தவிடுபொடியாக்கி கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட்வரை சென்றிருக்கிறார் தனுஷ். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் ரொம்பவே அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடும் அவர் ஆடுகளம், அசுரன் படங்களுக்காக தேசிய விருதையும் வாங்கியிருக்கிறார்.

Dhanush Raayan Kubera

கேப்டன் மில்லர்: அவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கியிருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. மேலும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தியும் படத்தின் கதை தனது பட்டத்து யானை நாவலின் கதை என்றும் கூறி பரபரப்பை கிளப்பினார்.

ராயன்: சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் 50 படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டன.அவரே இயக்கி நடிக்கும் படத்துக்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் போஸ்டரில் தனுஷ் கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் கெத்தாக நிற்க; அவருக்கு பின்னால் காளிதாஸ் ஜெயராமும், சந்தீப் கிஷனும் ஒரு ஃபாஸ்ட் புட் கடை செட்டப்பிலிருந்து எட்டி பார்க்கும்படி இருந்தார்கள். படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி சூப்பர் ரெஸ்பான்ஸ் பெற்றன. படம் அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது.

இளையராஜா பயோபிக்: இதற்கிடையே இளையராஜாவின் பயோபிக்கும் உருவாகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், கமல் ஹாசனின் திரைக்கதையில் உருவாகும் அப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். மேலும் சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்திலும் இப்போது நடித்துவருகிறார். இவை தவிர்த்து மாரி செல்வராஜுடன் ஒரு படத்திலும், அருண் மாதேஸ்வரனுடன் இன்னொரு படத்திலும் இணையவிருக்கிறார் தனுஷ்.

புதிய படம்: இந்நிலையில் தனுஷின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி போர் தொழில் படத்தை இயக்கி வெகுவாக கவனம் ஈர்த்த விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அநேகமாக இளையராஜா பயோபிக் மற்றும் மாரி செல்வராஜுடனான படத்தை முடித்த பிறகு இந்தப் படம் தொடங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர் திரைத்துறையினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X